தகாத உறவால் சீரழிந்த ஸ்ரீ வித்யா…. மொத்த சொத்துக்களையும் அழித்த கணவர்!

Author: Rajesh
27 January 2024, 8:45 pm

கர்நாடக இசைப் பாடகி எம். எல். வசந்தகுமாரியின் மகளான நடிகை ஸ்ரீ வித்யா 1970களில் இருந்து 2000களின் தொடக்கம் வரை பல்வேறு திரைப்படங்களில் நடித்துள்ளார். ஆரம்பத்தில் ஹீரோயினாக நடித்து வந்த அவர் பின்னர் அம்மா ரோல்களில் நடித்து பெரும் புகழ் பெற்றார்.

1976ல் பெற்றோர் பார்த்து வைத்த ஜார்ஜ் தாமஸ் என்பரை திருமணம் செய்துக்கொண்டு சில வருடத்திலே அவரை பிரிந்துவிட்டார். இவர் நடிகர் கமல் ஹாசனின் ஊரறிந்த காதலி. இந்நிலையில் சினிமாவில் உச்ச நடிகையாக இருந்த ஸ்ரீ வித்யாவின் வாழ்க்கை சீரழிந்தது பற்றி பேட்டி ஒன்றில் பேசியுள்ள பத்திரிகையாளர் பயில்வான் ரங்கநாதன்,

நடிகை ஸ்ரீவித்யாவின் அம்மா பிரபல பாடகி என்பதால் நிறைய பணம் பார்த்தவர். அதனால் செல்வச் செழிப்பு மிக்க குடும்பத்தில் பிறந்த ஒரே மகள் ஸ்ரீவித்யா. ஆனால், ஸ்ரீவித்யா சினிமாவில் நுழைந்த பின்னர் சில தகாத உறவுகளால் திருமண வாழ்க்கை சரியாக அமையவில்லை. எதிர்பார்த்த இல்லற வாழ்க்கை கிடைக்காமல் பலத்த ஏமாற்றமடைந்தார்.

அத்துடன் அவரது சொத்துக்கு ஆசைப்பட்டு திருமணம் செய்துக்கொண்ட கணவர் ஸ்ரீ வித்யாவின் மொத சொத்தையும் அழித்தார். பின்ன புற்றுநோயால் பாதிக்கப்பட்ட அவர் கடைசி காலகட்டத்தில் பைசா பணம் கையில் இல்லாமல் வறுமையில் வாடி இறந்தார் என கூறியுள்ளார் பயில்வான்.

  • ilaiyaraaja used yuvan shankar raja tune in his song தனது மகன் போட்ட ட்யூனையே காப்பி அடித்த இளையராஜா? இப்படி எல்லாம் நடந்துருக்கா?