எதிர்பாராததை எதிர்பாருங்கள்….! உறுதியான போட்டியாளர்கள் லிஸ்ட் – பிக்பாஸ் 7 சூப்பர் அப்டேட்!

Author: Shree
22 September 2023, 11:45 am

இந்திய தொலைக்காட்சிகளில் பல மொழிகளில் பரவலாக ஒளிபரப்பப்படும் நிகழ்ச்சிகளில் ஒன்றான பிக்பாஸ் ரியாலிட்டி ஷோ தமிழில் இதுவரை 6 சீசன்கள் முடிந்துள்ளது கமல் ஹாசன் தொகுத்து வழங்கி வரும் இந்நிகழ்ச்சிக்கு பெருவாரியான ரசிகர்கள் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

bigg boss 7 tamil-updatenews360

தற்போது அடுத்த சீசனாக பிக்பாஸ் 7 நிகழ்ச்சி துவங்க உள்ளனர். அதற்கான வேளைகளில் பிக்பாஸ் குழு மும்முரமாக இறங்கியுள்ளது. இந்த முறை யார் யாரெல்லாம் பங்கேற்க உள்ளார்கள் என்பதை கொஞ்சம் பொறுத்திருந்து பார்க்கலாம். கடைசியாக முகமது அசீம் வெற்றியாளராக அறிவிக்கப்பட்டார். ஆனால் அதை மக்கள் ஏற்றுக்கொள்ளவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

தற்போது அடுத்த சீசனுக்கான துவக்க வேலைகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது. இந்த சீசனும் மற்ற சீசன்களை போலவே சர்ச்சை ஏற்படுத்தும் வகையில் இருக்கவேண்டும் என்பதற்காக பார்த்து பார்த்து போட்டியாளர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். அவ்வப்போது ப்ரோமோ வீடியோக்கள் பிக்பாஸ் ஆடியன்ஸை அலார்ட் செய்யும்.

இந்நிலையில் தற்போது இந்த சீசனில், சீரியல் பிரபலங்கள் யார் யாரெல்லாம் பங்கேற்கிறார்கள் என்பது குறித்த விவரம் வெளியாகியுள்ளது. அதன்படி பிருத்விராஜ், மௌன ராகம் புகழ் ரவீனா, ஆபிஸ் சீரியல் விஷ்ணு, பாண்டியன் ஸ்டோர்ஸ் குமரன் மற்றும் பிகில் பட புகழ் இந்துஜா ஆகியோர் உறுதி செய்யப்பட்ட போட்டியாளர்கள் என தகவல் வெளியாகியுள்ளது.

  • ilaiyaraaja used yuvan shankar raja tune in his song தனது மகன் போட்ட ட்யூனையே காப்பி அடித்த இளையராஜா? இப்படி எல்லாம் நடந்துருக்கா?