இது நம்ம லிஸ்ட்லயே இல்லையே.. பூர்ணிமா மாயா இடையே முற்றிய மோதல்..!

Author: Vignesh
27 October 2023, 1:21 pm

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பிக்பாஸ் ரியாலிட்டி ஷோ தமிழில் இதுவரை 6 சீசன்கள் முடிந்துள்ளது கமல் ஹாசன் தொகுத்து வழங்கி வரும் இந்நிகழ்ச்சிக்கு பெருவாரியான ரசிகர்கள் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது, 7வது சீசன் பரபரப்பாக சென்றுக்கொண்டிருக்கிறது.

இதனிடையே, முதல் நாளில் இருந்தே பிக் பாஸில் நிறைய டாஸ்க் கொடுத்து போட்டியாளர்களை வறுத்தெடுத்து வருகிறார்கள். இந்த சீசன் விறுவிறுப்பின் உச்சமாக ஆரம்பிக்கப்பட்டுள்ளது. அனன்யா ராவ், பவா செல்லத்துரை,விஜய் வர்மா என 3 பேர் வீட்டை விட்டு வெளியேறிவிட்டார்கள்.

இதனிடையே, முன்பு எப்போதும் இல்லாத வகையில் சண்டை சச்சரவு பிரச்சனைகள் எல்லாம் இந்த சீசனில் எல்லை மீறி தான் சென்று கொண்டிருக்கிறது. இந்த சீசனில் பூர்ணிமா மாயா இருவரும் சேர்ந்துதான் கேம் விளையாடி வருகின்றனர் என்று போட்டியாளர்களிடையே பேசப்பட்டு வந்தது.

இந்நிலையில், வெளியான பிக் பாஸ் பிரமோவில் மாயா நிக்சனிடம் எனக்கு சாப்பாடு வேணும் நீங்க ஒப்புக்கொண்டால் நான் ஸ்மால் பாக்ஸ் வீட்டுக்கு வருகிறேன் என்று சொன்னார். இதற்கு நிக்சன் சரி வாங்க நான் பார்த்துக்கிறேன் என்று கூறினார். உடனே மாயா மற்றும் கூல் சுரேஷ் வீட்டிற்கு சென்றுள்ளனர். அப்போது பூர்ணிமா மாயாவிடம் யாரைக் கேட்டு அங்கு போனீங்க கேப்டன் கிட்ட கேக்கணும் என்று வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார்.

  • ilaiyaraaja used yuvan shankar raja tune in his song தனது மகன் போட்ட ட்யூனையே காப்பி அடித்த இளையராஜா? இப்படி எல்லாம் நடந்துருக்கா?