சிவகார்த்திகேயன் career-ஐ காலி செய்ய நினைத்த பிரபலம்.. உண்மையை உடைத்த முன்னாள் நண்பர்..!

Author: Vignesh
27 October 2023, 1:10 pm
sivakarthikeyan
Quick Share

கடந்த சில நாட்களாக சிவகார்த்திகேயன் மற்றும் இசையமைப்பாளர் டி. இமானின் சண்டை தான் சினிமாவின் தலைப்பு செய்தியாக இருந்து வருகிறது. பிரபல இசையமைப்பாளர் டி. இமான் சமீபத்திய பேட்டி ஒன்றில், ” சிவகார்த்திகேயன் தன்னை ஏமாற்றிவிட்டதாக. அவர் மிகப்பெரிய துரோகி என்றும் கூறி பரபரப்பை கிளப்பியுள்ளார். இது குறித்து மேலும் பேசிய அவர், “சிவகார்த்திகேயன் கடின உழைப்பாளி என்பதற்கு மாற்று கருத்தே இல்லை. மனம் கொத்தி பறவை படத்தில் ஆரம்பித்த அவருடனான பயணம் பல படங்களில் தொடர்ந்தது. ஆனால் அவர் எனக்கு மிகப்பெரிய துரோகம் செய்துவிட்டார்.

அவரை நான் மன்னிக்கவே மாட்டேன். மேலும், இந்த ஜென்மத்தில் அவருடன் சேர்ந்து பணியாற்ற மாட்டேன் என்று தடாலடியாக கூறினார். இவ்வளவு வெறுப்புக்கு என்ன காரணம் என கேட்டதற்கு… சம்பவத்தை வெளியில் சொல்ல முடியாது. பார்ப்பதற்கு தான் அவர் நல்ல மனிதர் என்னிடம் அன்பாக பேசிக்கொண்டே எனக்கு எதிரான வேலைகள் செய்துவந்ததை நான் தாமதமாக தான் புரிந்துக்கொண்டேன் என தெரிவித்திருந்தார்.

sivakarthikeyan-updatenews360

இந்நிலையில், சிவகார்த்திகேயனின் சினிமா வாழ்க்கையை அழிக்க சிலர் போட்ட சவால் தான் இதற்கு காரணம் என்று பத்திரிக்கை நிருப ஒருவர் தெரிவித்திருக்கிறார். அதாவது ட்விட்டர் பக்கத்தில், சிவகார்த்திகேயன் அந்த பத்திரிகையாளர் 2017 ல் சிவகார்த்திகேயனிடம் பேட்டி ஒன்றினை கேட்டிருந்ததாகவும், அதற்கு சிவகார்த்திகேயன் மறுப்பு தெரிவிக்க அப்போதே அவர் சிவாவின் சினிமா வாழ்க்கை அளித்து விடுவேன் என்று சவால் விட்டு, youtube காணொளிகளும் பேசி வருவது அதற்கு சாட்சி என்று அந்த நிருபர் தெரிவித்துள்ளார்.

sivakarthikeyan-updatenews360
Views: - 645

9

2