அக்ஷய த்ரிதியை நாளில் எகிறியது தங்கம் விலை… நகை வாங்க நினைத்தவர்களுக்கு அதிகாலையிலேயே ஷாக்..!!!

Author: Babu Lakshmanan
10 May 2024, 8:51 am
Gold Rate - Updatenews360
Quick Share

அக்ஷய த்ரிதியை நாளில் எகிறியது தங்கம் விலை… நகை வாங்க நினைத்தவர்களுக்கு அதிகாலையிலேயே ஷாக்..!!!

சென்னையில் ஆபரணத்தங்கத்தின் விலை கடந்த சில தினங்களாக உயர்ந்து வருகிறது. கடந்த வாரம் ரூ.55 ஆயிரத்தை தாண்டி விற்பனையாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியது. கடந்த சில ஆபரணத்தங்கத்தின் விலை தினங்களாக ஏறுமுகமாகவே இருந்து வந்தது.

அக்ஷய திருதியை நாளான இன்று பெரும்பாலானோர் தங்கம் வாங்க நினைப்பார்கள். இந்த நிலையில், தங்கம் விலை கிடுகிடுவென உயர்ந்திருப்பது வாடிக்கையாளர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.

மேலும் படிக்க: பொறியியல் கல்லூரி மாணவர்களின் கவனத்திற்கு… 15ம் தேதி நடக்கவிருந்த அண்ணா பல்கலை., செமஸ்டர் தேர்வுகள் ஒத்திவைப்பு…!!

வழக்கமாக, 9 மணிக்கு மேல் விலையில் மாற்றம் நிகழும் நிலையில், இன்று அதிகாலையிலேயே ரூ.360 உயர்ந்தது. பின்னர், மீண்டும் சவரனுக்கு ரூ.720 அதிகரித்தது. இதன்மூலம், கிராமுக்கு ரூ.45 உயர்ந்து ஒரு கிராம் ரூ.6,705க்கும், சவரனுக்கு ரூ.720 உயர்ந்து ஒரு சவரன் ரூ.53,640க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

Views: - 192

0

0

Leave a Reply