கைப்புள்ளையை போல் நக்கலாக டீல் செய்த வடிவேலு.. கடுப்பாகி வீட்டுக்கு பேக் செய்த தனுஷ்..!

Author: Vignesh
9 May 2024, 6:23 pm
dhanush-vadivelu
Quick Share

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான தனுஷ் 2002 ஆம் ஆண்டு வெளியான துள்ளுவதோ இளமை படத்தில் நடித்து நடிகராக அறிமுகம் ஆனார். அதன் பிறகு முதல் திருடா திருடி, காதல் கொண்டேன் , சுள்ளான் , புதுப்பேட்டை, பொல்லாதவன் , ஆடுகளம் வேலையில்லா பட்டதாரி , மாரி , அசுரன், கேப்டன் மில்லர் உள்ளிட்ட பல்வேறு திரைப்படங்களில் நடித்திருக்கிறார்.

Dhanushs-Captain-Miller

தற்போது வர தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர் இடத்தை தக்கவைத்திருக்கிறார். அடுத்தடுத்து மாஸான திரைப்படங்களில் நடித்து வரும் தனுஷ் நடிகராக மட்டுமே இயக்குனராகவும், தன்னை நிரூபித்து வருகிறார். இதன் பின்னர், தற்போது தனுஷ் தன்னுடைய ஐம்பதாவது படத்தை இயக்கி நடித்து வருகிறார்.

dhanush-raayan

மேலும் படிக்க: அந்த விசயத்தில் நமீதாவை ஏமாற்றிய அஜித்.. 16 ஆண்டுகளுக்குப் பின் வெளிச்சத்திற்கு வந்த உண்மை..!

இப்படத்திற்கு ராயன் என தலைப்பு வைத்துள்ளார். இப்படத்தில் எஸ் ஜே சூர்யா, பிரகாஷ்ராஜ், சந்திப் கிஷான், காளிதாஸ், ஜெயராம், அபர்ணா பாலமுரளி, துஷாரா விஜயன் உள்ளிட்ட பல நட்சத்திர பட்டாளமே இந்த படத்தில் நடிக்க உள்ளனர். பெரும் எதிர்பார்ப்பில் உருவாகி வரும் இந்த படத்தை சன் பிக்சர் நிறுவனம் தயாரிக்க உள்ளது. ஜிவி பிரகாஷ் இந்த படத்திற்கு இசையமைக்க உள்ளார். சமீபத்தில், தான் இப்படத்தின் அனைத்து கதாபாத்திரங்களின் பர்ஸ்ட் லுக் போஸ்ட் வெளியானது.

dhanush-raayan

மேலும் படிக்க: ஒரு செகண்ட்ல சமந்தான்னு நினைச்சிட்டோம் – நியூ லுக்கில் Video வெளியிட்ட வரலட்சுமி சரத்குமார்..!

தற்போது, கூற வரும் விஷயம் என்னவென்றால், தனுஷும் வடிவேலும் படிக்காதவன் படத்தில் சேர்ந்து நடிக்க கமிட் ஆகியிருந்தனர். சுராஜ் இயக்கத்தில் படிக்காதவன் படத்தில் முதலில் விவேக் கேரக்டருக்கு வடிவேலு தான் கமிட் செய்யப்பட்டிருந்தார். ஆனால், முதல் நாள் ஷூட்டிங்கில் இல்லாத வசனங்களை பேசி தனுசுக்கே டிமிக்கி கொடுத்ததாக கூறப்படுகிறது. அதோடு, தனுஷ் சொன்ன சில ஆலோசனைகளையும் கைப்புள்ளையைப் போல நக்கலாக டீல் செய்துள்ளார் வடிவேலு.

vadivelu - updatenews360

இதனால், ஷாக்கான தனுஷ் இயக்குனர் சுராஜ் உடன் பேசி முதல் நாளோடு வடிவேலுவை பேக் செய்து வீட்டுக்கு அனுப்பி விட்டாராம். அதன் பிறகு விவேக் அந்த கேரக்டரில் கமிட் ஆனதாக சொல்லப்படுகிறது. அன்று முதல் அந்த சம்பவத்தால், தனது படங்களில் வடிவேலுக்கு தனுஷ் வாய்ப்பு கொடுக்கவில்லை என்று கூறப்படுகிறது.

Views: - 95

0

0

Leave a Reply