ஐட்டம் சாங்குக்கு ஆடுனவங்க கையில அவார்ட் ஆ.. விசித்ராவை பார்த்த.. சீரியல் நடிகை பளீர்..!

Author: Vignesh
24 January 2024, 5:08 pm
vichithra-updatenews360
Quick Share

விசித்ரா முன்பு போல் , பழைய மாதிரி மீண்டும் கவர்ச்சி வேடங்களில் நடிக்க அவருக்கு ஆர்வம் இல்லையாம். தன்னுடைய உடல்வாகுக்கு ஏற்ற மாதிரி, போலீஸ் அல்லது தொழிலதிபர் போன்ற வேடங்களில் நடிக்க அவர் ஆர்வமாக இருக்கிறாராம்.

1990- களில் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் ஆகிய மொழிப்படங்களில் முன்னணி நடிகர்களுடன் நடித்தவர் நடிகை விசித்ரா. திருமணத்துக்குப் பிறகு வியாபாரத்தில் பிஸி ஆனதால் நடிப்புக்கு முழுக்கு போட்ட விசித்ராவுக்கு மூன்று குழந்தைகள் உள்ளனர்.

vichithra-updatenews360

தமிழில் கவர்ச்சியில் மட்டுமின்றி குணச்சித்திர மற்றும் காமெடி கதாபாத்திரங்களில் கலக்கியவர் நடிகை விசித்ரா. ரசிகன், முத்து, வீரா என இவர் நடித்த வெற்றிப்படங்கள் அதிகம். 17 வருடங்களுக்குப் பின்னர் மீண்டும் சினிமாவில் நடிக்க வேண்டும் என்ற ஆசையுடன் பட வாய்ப்புகளைத் தேடும் பணியை தொடங்கிய அவர் பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிய ராசாத்தி சீரியலில் நடித்து இருந்தார்.

இதன் பின்னர் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் என்ட்ரீ கொடுத்தார். அதனை தொடர்ந்து, பிக் பாஸ் போட்டியில் களமிறங்கி சில வாரங்கள் மட்டுமே தாக்குப் பிடிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், கிட்டத்தட்ட நூறு நாட்கள் வரை வீட்டிற்குள் இருந்து உள்ளார். தற்போது, கடந்த வாரம் மக்களிடமிருந்து குறைவான வாக்குகளை பெற்று வெளியேற விசித்ரா தனது கணவர் மற்றும் நண்பர்களுடன் பார்ட்டி வைத்து கொண்டாடியுள்ளார்.

vichithra-updatenews360

இந்நிலையில், சின்னத்திரை சீரியல் நடிகை பிரமி வெங்கட் சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில், நடிகை விசித்ரா பற்றி வெளிப்படையாக பேசியுள்ளார். அதில் சன் டிவி தொலைக்காட்சியில் கண்மணி சீரியல் விருது வழங்கும் நிகழ்ச்சியில், சிறந்த வில்லிக்கான விருது எனக்கு கொடுக்கப்பட்டது. ஆனால், அந்த விருதை விசித்திரா கொடுத்தது எனக்கு சின்ன வருத்தமாகவும், நெருடனாகவும் இருந்தது.

Premi Venkat

விசித்திரா நிறைய ஐட்டம் சாங்ஸ் தானே ஆடி இருக்கிறார்கள். கிளாமர் ஆர்ட்டிஸ்ட் ஆன நடிகை இப்போது அவர்கள் சீரியல் பண்ணலாம். ஆனாலும் அது எனக்கு முதல் விருது அவர் கொடுக்கும் போது சின்ன நெருடல் எனக்கு இருந்தது. வேறு யாராவது கொடுத்திருக்கலாம் என்ற நெருடலும் இன்று வரை இருந்தது. ஆனால், அந்த எண்ணத்தை நேர்மையாக கூறுகிறேன். எனக்கு மட்டும் அவர் கிளாமர் நடிகையின் இல்லை அவரை பார்க்கும் பலருக்கும் அப்படித்தான் தோன்றியது. ஆனால், அந்த அடையாளத்தை விசித்ரா பிக் பாஸ் மூலம் உடைத்து விட்டார்கள். பிக் பாஸில் அவர்களை பார்த்த பின்பு அப்படியே அந்த எண்ணத்தை மாற்றி விட்டதாக தெரிவித்திருக்கிறார்.

Views: - 210

0

0