T*** ஆட்டிட்டு இருந்தல்ல.. உன் கிட்ட கேட்க முடியாது.. பிரதீப்பை வெளு வெளுனு வெளுத்த கேப்டன் விஜய்..!

Author: Vignesh
3 October 2023, 1:10 pm

இந்திய தொலைக்காட்சிகளில் பல மொழிகளில் பரவலாக ஒளிபரப்பப்படும் நிகழ்ச்சிகளில் ஒன்றான பிக்பாஸ் ரியாலிட்டி ஷோ தமிழில் இதுவரை 6 சீசன்கள் முடிந்துள்ளது கமல் ஹாசன் தொகுத்து வழங்கி வரும் இந்நிகழ்ச்சிக்கு பெருவாரியான ரசிகர்கள் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது, அடுத்த சீசனாக பிக்பாஸ் 7 நிகழ்ச்சி துவங்கி உள்ளது.

bigg-boss-7 - updatenews360

இந்த சீசனில் கூல் சுரேஷ், அக்‌ஷயா உதயகுமார், ஐஷூ, விஜய் வர்மா, ஜோவிகா விஜயகுமார், பிரதீப் ஆண்டனி, பவா செல்லதுரை, விஷ்ணு விஜய்,அனன்யா ராவ், பூர்ணிமா ரவி, சரவண விக்ரம், வினுஷா தேவி, யுகேந்திரன் வாசுதேவன், மாயா கிருஷ்ணா, விசித்ரா, நிக்ஸன், மணி சந்திரா, ரவீனா தாஹா என மொத்தம் 18 பேர் போட்டியாளர்களாக பங்கேற்று உள்ளனர்.

இந்த சீசனில் தான் முதல்முறையாக பிக் பாஸ், ஸ்மால் பாஸ் என இரண்டு வீடுகள் இடம்பெற்றுள்ள நிலையில், இரண்டாவது வீடு சிறைச்சாலை போன்ற விதிகளுடன் இயங்க தொடங்கியுள்ளது. பிக் பாஸ் இன் இந்த ட்விஸ்ட் ரசிகர்களுக்கு எதிர்பார்ப்பை எதிர வைத்துள்ளது.

முதல் பிரமோ வீடியோவில் பிரதீப், விசித்ரா மற்றும் கேப்டன் விஜய்க்கும் கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. அதன் தொடர்ச்சியாக தற்போது, வெளியான இரண்டாவது பிரமோவில் கேப்டன் விஜய் மற்றும் பிரதீப் இடையே மோதல் வருகிறது. நீங்க கேக்கும் போது, என்ன பண்ணிட்டு இருக்கீங்க.. உங்க கிட்ட கேட்க முடியாது துண்டு ஆட்டிகிட்டு தான் இருந்தீங்க என காரசாரமாக கேப்டன் விஜய் பேசுகிறார். இதனால் கடுப்பாகும் பிரதீப் தனக்கு தேவையான உணவை கரும்படைகளில் எழுதி விட்டு செல்ல சமையலறையில் இருப்பவர்கள் கோபமடைகிறார்கள். இதை வைத்து பார்க்கும் போது இன்றைய எபிசோட் கண்டிப்பாக தீயாய் இருக்கும் என தெரிகிறது.

  • madhavan talks about ncert syllabus going controversial எங்க வரலாற்றை மறைக்கிறீங்க?- வம்பாக பேசி சர்ச்சையில் சிக்கிக்கொண்ட மாதவன்! ஏனப்பா இப்படி?