புவா சந்திரன்.. அவர நாமினேட் பண்றேன்.. பெயர் தெரியாமல் பிக் பாஸையே குழப்பிய விஷ்ணு..!(வீடியோ)

Author: Vignesh
3 October 2023, 11:58 am
vishnu serial actor-updatenews360
Quick Share

இந்திய தொலைக்காட்சிகளில் பல மொழிகளில் பரவலாக ஒளிபரப்பப்படும் நிகழ்ச்சிகளில் ஒன்றான பிக்பாஸ் ரியாலிட்டி ஷோ தமிழில் இதுவரை 6 சீசன்கள் முடிந்துள்ளது கமல் ஹாசன் தொகுத்து வழங்கி வரும் இந்நிகழ்ச்சிக்கு பெருவாரியான ரசிகர்கள் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது, அடுத்த சீசனாக பிக்பாஸ் 7 நிகழ்ச்சி துவங்கி உள்ளது.

bigg-boss-7 - updatenews360

இந்த சீசனில் கூல் சுரேஷ், அக்‌ஷயா உதயகுமார், ஐஷூ, விஜய் வர்மா, ஜோவிகா விஜயகுமார், பிரதீப் ஆண்டனி, பவா செல்லதுரை, விஷ்ணு விஜய்,அனன்யா ராவ், பூர்ணிமா ரவி, சரவண விக்ரம், வினுஷா தேவி, யுகேந்திரன் வாசுதேவன், மாயா கிருஷ்ணா, விசித்ரா, நிக்ஸன், மணி சந்திரா, ரவீனா தாஹா என மொத்தம் 18 பேர் போட்டியாளர்களாக பங்கேற்று உள்ளனர்.

bava chelladurai - updatenews360

இந்த சீசனில் தான் முதல்முறையாக பிக் பாஸ், ஸ்மால் பாஸ் என இரண்டு வீடுகள் இடம்பெற்றுள்ள நிலையில், இரண்டாவது வீடு சிறைச்சாலை போன்ற விதிகளுடன் இயங்க தொடங்கியுள்ளது. பிக் பாஸ் இன் இந்த ட்விஸ்ட் ரசிகர்களுக்கு எதிர்பார்ப்பை எதிர வைத்துள்ளது.

vishnu serial actor-updatenews360

இந்நிலையில், நாமினேஷன் பிராசஸரில் குழம்பிய விஷ்ணுவின் வீடியோ இணையதளத்தில் வெளியாகி குபீர் சிரிப்பை வர வைத்துள்ளது. அதாவது, பிக் பாஸிடம் கூறுகையில், பூவாவை நாமினேட் செய்கிறேன் என விஷ்ணு சொல்லும் நிலையில், பூவா என்று இங்கு யாரும் இல்லையே என பிக் பாஸ் சொல்கிறார்.

vishnu serial actor-updatenews360

அதற்கு பூவா சந்திரன் அவர்தான் ஸ்மால் பாஸ் வீட்ல இருக்காரு என விஷ்ணு சொல்ல எனக்கு புரியல அவர் தோற்றத்தை விளக்குங்க என பிக் பாஸ் சொல்கிறார். அதற்கு அவர் அப்பா மாதிரி இருப்பார். வெள்ளை தாடி வச்சிருப்பாரு, ரைட்டர் என விஷ்ணு சொல்ல அவர் பாவா செல்லதுரை என பிக் பாஸ் ஸ்ட்ரிக்ட்டாக காமெடி பண்ண, விஷ்ணு நெளிகிறார்.

bava chelladurai - updatenews360

விஷ்ணுவின் இந்த செயல் சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது. நாமினேஷன் னா என்னங்க ஐயா என்று கேட்க, கஞ்சா கருப்பு கமலஹாசனிடம் முதல் நாளே காமெடி பண்ண ஜி.பி.முத்து ஆகிய காட்சிகளுக்கு டஃப் கொடுக்கும் வகையில் அமைந்து இணையத்தில் வைரலாகி வருகிறது.

Views: - 395

0

0