பெண்கள் புகைப்பிடிக்கும் கலாச்சாரம்..! எதிர்ப்பாரா கமல்.?

Author: Rajesh
1 February 2022, 2:55 pm
Quick Share

தமிழில் தற்போது முதன்முறையாக ஓடிடி தளத்துக்காக மட்டும் பிரத்யேகமாக பிக்பாஸ் நிகழ்ச்சி ஒன்று நடத்தப்படுகிறது. இந்நிகழ்ச்சியையும் கமல்ஹாசன் தான் தொகுத்து வழங்குகிறார். பிக்பாஸ் அல்டிமேட் என பெயரிடப்பட்டு உள்ள, இந்நிகழ்ச்சி 24 மணிநேரமும் நேரடியாக ஒளிபரப்பு செய்யப்பட்டு வருகிறது.

இந்நிகழ்ச்சியில் சினேகன், சுஜா வருணி, ஜூலி, தாடி பாலாஜி, ஷாரிக், அபிராமி, வனிதா, அனிதா, சுரேஷ் சக்ரவர்த்தி, பாலாஜி முருகதாஸ், சுருதி, நிரூப், தாமரைச் செல்வி, அபிநய் என மொத்தம் 14 போட்டியாளர்கள் களமிறங்கி உள்ளனர். 

3 வருடம் காதலித்து பின்னர் பிரேக் அப் செய்து கொண்ட நிரூப்பும், அபிராமியும் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டுள்ளனர். பிக்பாஸ் வீட்டில் புகைபிடிப்பதற்கு என தனியாக இருக்கும் ஒரு சிறிய அறையில், நடிகை அபிராமி தனது முன்னாள் காதலன் நிரூப் மற்றும் சக போட்டியாளர்களான அபிநய், ஷாரிக் ஆகியோருடன் இணைந்து சிகரெட் புகைப்பது போன்ற காட்சிகள் இடம்பெற்றிருந்தன.

இந்த நிலையில், ஒரு பெண் எப்படி சிகரெட் பிடிக்கலாம் என அபிராமிக்கு எதிராக சிலர் குரல் கொடுத்து வரும் வேலையில், அது அவரது தனிப்பட்ட விஷயம், அதை கேள்வி கேட்க யாருக்கும் உரிமை இல்லை என சிலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில் இந்த நிகழ்வை நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வரும் கமலஹாசன் தட்டி கேட்பாரா என ரசிகர்களின் பலரின் மனதில் கேள்வி எழுந்துள்ளது.

Views: - 513

1

2