தியேட்டரில் தலைவான்னு கத்திய 3 வயசு பையன்… கடுப்பான ப்ளூ சட்டை மாறன் என்ன செய்தார்னு பாருங்க!
Author: Shree18 ஆகஸ்ட் 2023, 1:36 மணி
நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் அண்மையில் சூப்பர்ஸ்டார் நடிப்பில் வெளியான திரைப்படம் ஜெயிலர். பீஸ்ட் பட தோல்விக்கு பிறகு இப்படம் செம கம்பேக் ஆக அமைந்துள்ளது. ரம்யா கிருஷ்ணன், தமன்னா, மோகன்லால், சிவராஜ்குமார் மற்றும் பலர் நடிப்பில் வெளியான இப்படம் திரையரங்குகளில் வெற்றி நடைபெற்று வருகிறது.
காமெடி, ஆக்ஷன், செண்டிமெண்ட் என கலந்த கலவையாக ஜெயிலர் திரைப்படம் அமைந்து ரசிகர்களை மகிழ்வித்து வருகிறது. ரஜினியின் ஸ்டைல், நெல்சனின் டார்க் காமெடி, அனிருத் இசை என பக்கா காம்போவாக அமைந்துள்ளது. பாசிட்டிவ் ரிவியூ பெற்று வரும் இத்திரைப்படம் ரூ.450 கோடி வசூலை பெற்று சாதனை படைத்துள்ளது.
இப்படியான நேரத்தில் ரஜினி – ப்ளூ சட்டை மாறன் மோதல் குறித்து சமூகவலைத்தளங்களில் வைரலாக பேசப்பட்டு வருகிறது. இந்நிலையில் தனது ட்விட்டர் பக்கத்தில் 3 வயசு பையன் ரஜினியின் ரசிகனாக உணர்ச்சிவசப்பட்டு தியேட்டரில் கத்தியது குறித்து விமர்சித்துள்ளார்.
அந்த பதிவில், ஜெயிலர் படத்தை நான் தியேட்டரில் பார்த்போது மூன்று வயது சிறுவன் ‘தலைவா’ என்று திரையை பார்த்து கத்தினான் – தனஞ்செயன் பேட்டி.
அந்த பையன் கிட்ட ‘நாட்டுக்கு பாடுபட்ட காந்தி, காமராஜர், பகத்சிங் போன்றோரை தலைவா என்று சொல்றதுதான் சரி’ ன்னு சொல்லிட்டு வரலையா சார்? அதை விட்டுட்டு அந்த வரலாற்று சிறப்பு மிக்க நிகழ்வை செல்போன்ல வீடியோ எடுக்கலைன்னு வருத்தம் வேற படறீங்க. ஒரு சாதாரண படத்துக்கு இவ்வளவு உணர்ச்சிவசப்பட வேண்டிய அவசியம் என்ன சார்?
மூணு வயசு பையனை பத்தி திரும்ப திரும்ப பேசுறீங்க. விட்டுருங்க. அந்த தலைமுறையாவது உண்மையான, உருப்படியான தலைவர்களை பத்தி படிக்கட்டும். படிச்ச நீங்களும்… …வளர்ந்து வரும் புதிய தலைமுறையை..
ஹீரோயிச மோகத்துக்கு நேரடியாவோ, மறைமுகமாவோ தூண்ட காரணமா இருக்காதீங்க. என ரஜினி மீதுள்ள வெறுப்பை கக்கியுள்ளார்.
ஜெயிலர் படத்தை நான் தியேட்டரில் பார்த்போது மூன்று வயது சிறுவன் 'தலைவா' என்று திரையை பார்த்து கத்தினான் – தனஞ்செயன் பேட்டி.
— Blue Sattai Maran (@tamiltalkies) August 17, 2023
அந்த பையன் கிட்ட 'நாட்டுக்கு பாடுபட்ட காந்தி, காமராஜர், பகத்சிங் போன்றோரை தலைவா என்று சொல்றதுதான் சரி' ன்னு சொல்லிட்டு வரலையா சார்?
அதை விட்டுட்டு அந்த… pic.twitter.com/DFiYidCPMQ
0
0