அந்த படத்துல ஹீரோவை விட வில்லனுக்கு சம்பளம் ஜாஸ்தியா… குறைவான சம்பளம் வாங்கிய விஜய்..!

Author: Vignesh
18 ஆகஸ்ட் 2023, 1:30 மணி
vijay leo
Quick Share

தமிழ் சினிமாவின் உச்ச நடிகரான விஜய் தளபதி என்று ரசிகர்களால் அன்போடு அழைக்கப்படுகிறார். இவர் நாளைய தீர்ப்பு படத்தில் நடிகராக அறிமுகமாகி பூவே உனக்காக படத்தின் மூலம் புகழ் பெற்றார். அதன் பின்னர் தொடர்ந்து பல்வேறு வெற்றி படங்களில் நடித்து புகழின் உச்சத்திற்கு சென்று சினிமாவில் அசைக்கமுடியாத இடத்திற்கு சென்றுவிட்டார். இதுவரை 66 படங்களில் நடித்திருக்கிறார். 67 வது படமாக லியோவில் நடித்து வருகிறார்.

leo-updatenews360

லியோ படத்தை தொடர்ந்து வெங்கட்பிரவு இயக்கத்தில் நடிக்க இருக்கும் படத்திற்கு 175 கோடி சம்பளம் வாங்க போகிறார் என்ற தகவல்கள் இணையதளத்தில் பரவி வருகிறது. அதுமட்டுமின்றி விஜய் விரைவில் அரசியலில் நுழை இருப்பதாகவும் கூறப்படுகிறது.

இந்நிலையில், விஜய் என்னதான் தற்போது மிகப்பெரிய அளவுக்கு சம்பளம் வாங்கினாலும், ஒரு காலகட்டத்தில் அவர் வளரும் நடிகராக இருந்த சமயத்தில் மற்ற நடிகர்களை விட குறைவாகத்தான் சம்பளம் வாங்கி இருக்கிறார். அதிலும், 1996 ல் வெளிவந்த வசந்தவாசல் என்ற படத்தில் மன்சூர் அலிகான் வில்லனாக நடித்திருந்தார்.

ஹீரோ விஜய்க்கு வெறும் இரண்டு லட்சம் தான் அப்போது சம்பளமாக கொடுக்கப்பட்டதாம். ஆனால், வில்லனாக நடித்த மன்சூர் அலிகானுக்கு 4 லட்சம் சம்பளம் தரப்பட்டதாம். இந்த விஷயத்தை சமீபத்தில் மன்சூர் அலிகான் தெரிவித்திருக்கிறார்.

Vijay - Updatenews360
  • Kangana பிரபல பாடகருடன் காருக்குள் போதையில் தள்ளாடிய ஆளுங்கட்சி பெண் எம்பி.. வெளியான ஷாக் தகவல்!
  • Views: - 273

    0

    0