அவருடைய மனைவி என அடையாளப் படுத்த வேண்டாம்; நானாக இருக்க விடுங்கள்; பிளீஸ்

Author: Sudha
23 July 2024, 4:06 pm

தன் விவாகரத்தைக் குறித்து மனம் திறந்து பேசியிருக்கிறார் இயக்குனர் கிரண் ராவ்.பாலிவுட் முன்னணி நடிகர் அமீர்கான் மற்றும் கிரண் ராவ் விவாகரத்து குறித்து பல சர்ச்சைகள் எழுந்தது. அதற்கு பதிலளித்த கிரண் ராவ் எங்கள் இருவருக்கும் எந்த குழப்பமும் இல்லை. எங்களது இரு குடும்பமும் எங்களின் இந்த முடிவைப் புரிந்து கொண்டு எங்களுக்குத் துணையாக நிற்கின்றன. அந்த வகையில் நான் பாக்கியசாலி. தனியாக இருப்பது ஆரம்பத்தில் எனக்குக் கொஞ்சம் கஷ்டமாக இருந்தது. நாளடைவில் அது பழகிவிட்டது. இப்போது நான் சுதந்திரமாகவும், மகிழ்ச்சியாகவும் இருக்கிறேன். இது மகிழ்ச்சியான விவாகரத்துதான்” என்று பேசியிருக்கிறார்.

மீண்டும் தனது கனவுகளை நோக்கிப் பயணிக்கத் தொடங்கி பாலிவுட்டில் பிரபல இயக்குநராக வலம் வந்துகொண்டிருக்கிறார். முன்னதாக இவரது முதல் படமான ‘தோபிகாட்’ படம் சர்வதேச அளவில் கவனத்தை ஈர்த்தது.

இரண்டாவது படமாகச் சமீபத்தில் இவர் இயக்கிய ‘லாபத்தா லேடிஸ்’ திரைப்படம் பெரும் வரவேற்பைப் பெற்றது.

வடமாநிலங்களில் ஆணாதிக்கத்தால் தங்களின் சுய அடையாளம், விருப்புவெறுப்புகள் மறுக்கப்பட்டு இன்றும் ஒடுக்கப்பட்ட சமூகமாக வாழும் பெண்களின் துயரத்தின் சாட்சியாக வெளியான இத்திரைப்படம் பாராட்டுகளைக் குவித்தது.

அமீர்கானின் முன்னாள் மனைவி என்று தன்னை அடையாளப் படுத்துவதை வெறுப்பதாகவும் தனக்கென்று ஒரு அடையாளம் உள்ளது எனவும் அவர் சொல்லி உள்ளார்.

  • ilaiyaraaja used yuvan shankar raja tune in his song தனது மகன் போட்ட ட்யூனையே காப்பி அடித்த இளையராஜா? இப்படி எல்லாம் நடந்துருக்கா?