விஜயகாந்த்துடன் நடிக்க முடியாது… மெகாஹிட் படத்தை உதறி தள்ளிய நடிகை ஸ்ரீதேவி!

Author: Udayachandran RadhaKrishnan
25 June 2024, 12:03 pm
sridevi
Quick Share

சினிமாவை பொறுத்தவரைக்கு டாப் ஹீரோக்கள் சிலர், பிரபலமான கதநாயகிகளுடன் ஒன்று சேர்ந்து நடித்ததில்லை. குறிப்பாக ரஜினி – சுகன்யா, கமல் – நதியா, விஜய் – மீனா என பட்டியலில் ஏராளமான ஜோடிகள் உண்டு.

அப்படித்தான் தமிழ் சினிமாவில் கோலோச்சிய இரு பிரபலங்கள் இது வரை ஜோடி சேராமலயே மறைந்து விட்டனர் என்பது சோகமான செய்தி.

ஆம், கேப்டன் விஜயகாந்த்தும், மயில் ஸ்ரீதேவியும் இதுவரை ஒரு படம் கூட இணையவில்லை.. இருவரும் உச்ச நடிகர்களாக இருந்த பின்னரும் இந்த ஜோடி சேரவில்லை.

ஆனால் இருவரும் இணைந்து நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. 1992 காலக்கட்டத்தில் புரட்சி கலைஞராக விஜயகாந்த் உருவெடுத்திருந்தார். அதே சமயத்தில் நடிகை ஸ்ரீதேவியும் தமிழ், தெலுங்கு, இந்தி என படு பிஸியாக நடித்துக் கொண்டிருந்தார்.

ஆனால் தமிழில் நடிக்க அவர் அவ்வளவு ஆர்வம் காட்டவில்லை. இந்த நிலையல் இயக்குநர் ஆர்வி உதயகுமார், ஸ்ரீதேவியை சின்னகவுண்டர் படத்தில் நடிக்க வைக்க பேச்சுவார்த்தை நடத்தினார்.

விஜயகாந்த் ஒரு புறம் ஓகே சொல்ல, ஸ்ரீதேவியோ பாலிவுட்டை விட்டு பிரிய மனமில்லாமலும், விஜயகாந்த்துடன் நடிக்க பிடிக்காத காரணத்தால் நோ சொல்லிவிட்டார்.

இறுதியில் இந்த படத்தில் சுகன்யா நடித்து, சிறந்த நடிகைக்கான தமிழக அரசின் விருதையும் தட்டிச் சென்றார்.

Views: - 91

0

0