கை வைக்காத நடிகையே கிடையாது; 16 வயசு பொண்ணுன்னு கூட பாக்காம.. ரேவதி OPEN TALK..!

Author: Vignesh
25 June 2024, 1:35 pm
revathi-updatenews360
Quick Share

என் இனிய தமிழ் மக்களே என்று சொன்னவுடன் சட்டென நியாபகத்திற்கு வருபவர் இயக்குனர் பாரதி ராஜா. இவர் தமிழ் சினிமாவில் 16 வயதினிலே என்ற சூப்பர் ஹிட் படத்தின் மூலம் இயக்குனர் அவதாரம் எடுத்தார். பெரும்பாலும் தன் ஒவ்வொரு படங்களிலும் உணர்வு நிறைந்த நாட்டுப்புறக் கதைகளை கொடுத்து இசையமைப்பாளர் இளையராஜாவுடன் இணைந்து மறக்க இயலாத இனிய பாடல்களைத் தந்துள்ளார்.

bharathiraja - updatenews360

இயக்குனர் பாரதிராஜா ராதிகா, ராதா, ரேவதி, ரேகா, ரஞ்சிதா, போன்ற பல கதாநாயகிகளை அறிமுகம் செய்தவர். இவர் சில படங்களில் நடித்தும் உள்ளார். பல்வேறு சூப்பர் ஹிட் படங்களை கொடுத்து தமிழ் சினிமாவின் முத்தான இயக்குநரகளில் ஒருவரான பாரதி ராஜாவிடம் உதவி இயக்குனர்களாக பாக்யராஜ், மணிவண்ணன், மனோபாலா, சித்ரா லட்சுமணன், மனோஜ்குமார், பொன்வண்ணன், சீமான், லீனா மணிமேகலை ஆகியோர் உதவி பணியாற்றி உள்ளனர்.

revathi-updatenews360

இந்த நிலையில், பாரதிராஜா இயக்கிய படங்களில் நடித்த நடிகர், நடிகைகள் தற்போது தமிழ் சினிமாவில் கொடிகட்டி பறக்கும் பிரபலங்களாக இருந்து வருகிறார்கள். அப்படித்தான் பாரதிராஜாவால் அறிமுகப்படுத்தப்பட்டு புது முகங்களில் ஒருவராக திகழ்ந்தவர் நடிகை ரேவதி. இவர் மண்வாசனை படத்தில் பாண்டியனுக்கு ஜோடியாக நடித்து அறிமுகமானார். அப்படம் கொடுத்த வரவேற்பால் அடுத்தடுத்து, படங்களில் நடித்து 80s சில் கொடி கட்டி பறந்த நாயகியாக ஜொலித்தார்.

பாரதிராஜா என்றால் தன் படத்தில் நடிக்கும் நடிகர்களிடம் இருந்து நடிப்பு வர வேண்டி கன்னத்தில் பளார் விடவும் தயங்கமாட்டார் என்பது அனைவரும் அறிந்த விஷயமே. அப்படித்தான் அவர் கை வைக்காத அடிக்காத அடிக்காமல் உயர்ந்த நட்சத்திரங்களே கிடையாது. இதுகுறித்து சித்ரா லக்ஷ்மனனின் பேட்டியில் ரேவதி பகிர்ந்து கொண்டுள்ளார். அதாவது, பாரதிராஜா அடிக்காமல் நடித்து முடித்த நடிகைகளை கிடையாது என்று ரேவதி தெரிவித்து இருந்தார்.

revathi-updatenews360

நீங்கள் எந்த கட்டத்தில் அடி வாங்கினீர்கள் என்று கேட்டுள்ளார் சித்ரா லக்ஷ்மணன் அதற்கு ரேவதி ஒரே ஒரு அடி மண் வாசனை படத்தில் தான் வாங்கி இருக்கிறேன். அதுவும் மண்வாசனை படத்தின் கிளைமாக்ஸ் இல் தான், அந்த காட்சியில் கத்தி பேச வேண்டும். அதற்காக கன்னத்தில் பளார் என்று அடித்தார். 16 வயதில் சின்ன பொண்ணு கூட பார்க்காம அப்படி அடித்தது என்னால் இப்போது வரை மறக்க முடியாது. ஆனால், அது அடி கிடைக்காது, அந்த அடி என்னை என்கரேஜ் செய்ய அடித்தது போல் தான் இருந்தது என்று ரேவதி அந்த பேட்டியில் தெரிவித்துள்ளார்.

Views: - 106

0

0