அப்போ இல்ல.. இல்லனு சொன்னதெல்லாம் உருட்டா?.. காதல் மேட்டரை ஓப்பன் செய்த KPY பாலா..!

Author: Vignesh
13 March 2024, 6:18 pm

விஜய் தொலைக்காட்சியில் இப்போதெல்லாம் எந்த ஒரு நிகழ்ச்சியை எடுத்தாலும், பாலா அதில் கண்டிப்பாக இருப்பார். அந்த அளவிற்கு தனது ரைமிங் காமெடிகள் மூலம் மக்களை வெகுவாக கவர்ந்து விட்டார்.

டிவி நிகழ்ச்சிகள் மட்டும் இல்லாது தனியார் மற்றும் வெளிநாட்டு நிகழ்ச்சிகளிலும், கலந்து கொண்டு தனது திறமையை வெளிக்காட்டி வருகிறார் பாலா. இப்போது பாலா செய்துள்ள ஒரு விஷயத்தால் அவருக்கு பாராட்டுக்கள் குவிந்த வண்ணம் உள்ளது.

kpy bala

முன்னதாக, பாலா சின்னத்திரை மற்றும் வெள்ளித்திரை என இரண்டிலும் பிஸியாக இருந்தாலும், ஒரு பக்கம் மக்களுக்கு பொது சேவையும் செய்து வருகிறார். சமீபத்தில் மிச்சாங் புயலில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு பல உதவிகளை செய்திருந்தார்.

kpy bala

சமீபத்தில், பாலா மருத்துவ சேவைக்காக இலவச ஆட்டோவை வழங்கியிருக்கிறார். இதைப்பற்றி பாலா பேசிய போது, மருத்துவத்திற்கு செல்பவர்கள் பேருந்துக்காக காத்திருக்க வேண்டிய நிலைமை இருக்கிறது. அவசர காலத்தில் ஆட்டோவில் கூட செல்ல முடியவில்லை.

kpy bala

அதனால், தான் கர்ப்பிணி பெண்கள், முதியோர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்காக இலவச ஆட்டோவை தொடங்குகிறோம். ஆட்டோ ஓட்டுனர் மற்றும் பெட்ரோல் செலவை நானே ஏற்றுக் கொள்கிறேன். இனி ஒரு உசுர கூட கஷ்டப்படக் கூடாது என்று பாலா பேசி இருந்தார். இந்நிலையில், தான் சம்பாதிக்கும் பணத்தின் மூலம் தன் பகுதியை சுற்றியுள்ள சிறியவர்களை படிக்க வைப்பது, ஆதரவற்ற குழந்தைகளை படிக்க வைப்பது, ஆதரவற்ற பெரியோர்களுக்கு உதவுவது, ஆம்புலன்ஸ் வாங்கி தருவது என நிறைய உதவிகளை பாலா செய்த வண்ணம் உள்ளார். சமூக வலைதளத்தில் பாலா செய்யும் உதவிகளுக்கு ஆதரவு குவிந்து வருகின்றது.

இந்நிலையில், கல்லூரி விழா ஒன்றில் கலந்துகொண்டு பேசிய பாலா புதுச்சேரியில் ஒன்பது வயது சிறுமி பாலியல் துன்புறுத்தல் காரணமாக உயிரிழந்தது குறித்து பேசினார். அப்போது, குழந்தைகளுக்கு குட் டச் பேட்ச் சொல்லிக் கொடுப்பதை விட டோன்ட் டச் என சொல்லிக் கொடுங்கள். அதுதான் இந்த காலத்திற்கு சிறந்தது என்று பேசி இருந்தார். மேலும், யாரும் எதிர்பாராத விதமாக அடுத்த மாதம் தனக்கு காதல் திருமணம் நடைபெற உள்ளதாக, அறிவித்த பாலாவிடம் அங்கிருந்த மாணவர்கள் இல்லைன்னு சொன்னிங்களே அப்போ அதெல்லாம் உருட்டா என்று கேள்வி எழுப்பினர். மேலும், சிலர் காதலி யார் என கேட்டபோது சிரிப்பையே தன்னுடைய பதிலாக பாலா அளித்திருந்தார். எனினும், விரைவில் பாலா திருமணம் குறித்த மற்ற விவரங்கள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. பாலாவிற்கு பலரும் தங்களின் வாழ்த்துக்களை தெரிவித்து வருவது குறிப்பிடத்தக்கது.

  • G.V. Prakash understood Sainthavi at the time of separation.. Affection blossomed during the divorce case பிரியும் நேரத்தில் சைந்தவியை புரிந்து கொண்ட ஜி.வி பிரகாஷ்.. விவாகரத்து வழக்கில் மலர்ந்த பாசம்!