லோகி படம் மாதிரியே இல்லை;சுமார் ரகம்- திரையரங்கிற்கு வெளியே கதறும் ரசிகர்கள்…
Author: Prasad14 August 2025, 11:18 am
வெளியானது கூலி
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகியுள்ள “கூலி” திரைப்படம் இன்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகியுள்ளது. ரசிகர்களால் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட இத்திரைப்படம் இன்று வெளியாகியுள்ள நிலையில் திரையரங்குகள் விழா கோலம் பூண்டுள்ளது. இன்று அதிகாலையே தாரை தப்பட்டைகள் கிழிய “கூலி” திரைப்படத்தை கொண்டாட்டத்துடன் வரவேற்றனர் ரசிகர்கள்.
தமிழகம் முழுவதும் இன்று காலை 9 மணிக்கு சிறப்பு காட்சிகளுடன் திரையிடல் தொடங்கப்பட்டது. எனினும் ஆந்திரா போன்ற மாநிலங்களில் காலை 9 மணிக்கு முன்பே காட்சிகள் தொடங்கப்பட்டன. இந்த நிலையில் இத்திரைப்படத்தை முதல் நாள் முதல் காட்சி பார்த்த ரசிகர்கள் என்ன சொல்கிறார்கள் என்பதை பார்க்கலாம்.

முதல் பாதியே சுமாரா இருக்கு?
இத்திரைப்படத்தை பார்த்த ரசிகர்கள் பலரும் முதல் பாதியே சுமாராக இருப்பதாக கூறி வருகின்றனர். மேலும் கதை, திரைக்கதை என எதிலும் சுவாரஸ்யம் இல்லை எனவும் படத்தில் எதிர்பாராத டிவிஸ்ட் என்று எதுவும் இல்லை எனவும் கருத்து தெரிவிக்கின்றனர்.
ரஜினிகாந்தின் நடிப்பு மிகவும் அருமை எனவும் நாகர்ஜுனா, சௌபின் சாஹிர் சிறப்பாக நடித்திருக்கிறார்கள் எனவும் பாராட்டுகிறார்கள். மற்றபடி உபேந்திரா, ஆமிர்கான் ஆகியோரின் என்ட்ரி பயங்கரமாக இருப்பதாக தெரிவிக்கின்றனர். படத்தின் கடைசி 20 நிமிடங்கள் சிறப்பாக இருப்பதாகவும் பாராட்டுகின்றார். மொத்தமாக பார்க்கும்போது இத்திரைப்படத்திற்கு இப்போது வரை கலவையான விமர்சனங்களே வெளிவருகின்றன.
