இனிமே நான்தான் இங்கே KING- கோலிவுட்டின் முன்னணி நடிகர்களை ஓரங்கட்டிய ரஜினி!
Author: Prasad25 August 2025, 1:28 pm
கலவையான விமர்சனம், ஆனால்?
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்துள்ள “கூலி” திரைப்படம் ரசிகர்களின் மத்தியில் கலவையான விமர்சனங்களை பெற்றிருந்தாலும் இத்திரைப்படத்தின் வசூல் அதிகரித்து கொண்டேதான் வருகிறது. இத்திரைப்படம் வெளியான முதல் நான்கு நாட்கள் திரையரங்குகளில் கூட்டம் அலை மோதியது. ஆனால் அடுத்தடுத்த நாட்களில் கூட்டம் சற்று குறைந்தது. எனினும் இத்திரைப்படத்தின் வசூலில் எந்த பாதிப்பும் இல்லை.

முன்னணி நடிகர்களை ஓரங்கட்டிய ரஜினி?
இந்த நிலையில் “கூலி” திரைப்படத்தின் வசூல் நிலவரம் குறித்து ஒரு தகவல் வெளியாகியுள்ளது. அதாவது இத்திரைப்படம் வெளியாகி தற்போது 11 நாட்கள் முடிவடைந்துள்ள நிலையில் ரூ.485 கோடி வசூல் ஆகியுள்ளதாக கூறப்படுகிறது.
இத்திரைப்படம் ரூ.1000 கோடி வசூல் அடிக்கும் என ரசிகர்கள் பலரும் எதிர்பார்த்து வரும் நிலையில் இன்னும் சில நாட்களில் இத்திரைப்படம் ரூ.500 கோடி வசூலை தொடும் என எதிர்பார்க்கப்படுகிறது. எனினும் இத்திரைப்படம் ரூ.1000 கோடி கல்லா கட்டுமா என இனி வரும் நாட்களில் நாம் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
