கூலி படத்தில் 4 நிமிட காட்சிகள் நீக்கம்? அதிரடி காட்டிய சென்சார் போர்டு!
Author: Prasad20 August 2025, 3:10 pm
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் உருவான “கூலி” திரைப்படம் கடந்த ஆகஸ்ட் மாதம் 14 ஆம் தேதி வெளியானது. இத்திரைப்படம் தற்போது வரை ரூ.400 கோடிகள் வரை வசூல் செய்துள்ளது. இத்திரைப்படத்திற்கு முதலில் “A” சான்றிதழ் வழங்கப்பட்டது. ஆதலால் இத்திரைப்படத்தை ரசிகர்கள் குழந்தை குட்டியுடன் பார்க்க முடியவில்லை. இதனால் ரசிகர்கள் சோகத்தில் மூழ்கினர்.

இந்த நிலையில் சிங்கப்பூரில் “கூலி” திரைப்படம் மறுதணிக்கை செய்யப்பட்டு அதில் இருந்து 4 நிமிட காட்சியை படக்குழுவின் ஒப்புதலுடன் நீக்கியுள்ளனர். அதாவது சிங்கப்பூரில் இதற்கு முன்பு NC-16 (No Children under 16) என்ற சான்றிதழ் “கூலி” படத்திற்கு வழங்கப்பட்டது. தற்போது 4 நிமிட காட்சிகள் நீக்கப்பட்டு PG-13 (Parents Strongly cautioned) என சான்றிதழ் மாற்றப்பட்டுள்ளது.
இதனிடையே “கூலி” திரைப்படத்திற்கு “U/A” சான்றிதழுடன் திரையரங்களில் திரையிட அனுமதிக்க வேண்டும் என சன் பிக்சர்ஸ் நிறுவனம் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு அளித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
