ஒரே வாரத்தில் காத்து வாங்கிய திரையரங்கம்? கூலி படத்திற்கு இப்படி ஒரு நிலைமையா வரணும்!
Author: Prasad21 August 2025, 4:30 pm
மிகவும் எதிர்பார்க்கப்பட்ட திரைப்படம்
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் கடந்த ஆகஸ்ட் 14 ஆம் தேதி வெளியான “கூலி” திரைப்படம் ரசிகர்களின் மத்தியில் கலவையான விமர்சனங்களையே பெற்றது. மிகப்பெரிய எதிர்பார்ப்பில் வெளியான இத்திரைப்படம் ரசிகர்களின் அந்த எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யவில்லை.
“கூலி” திரைப்படம் வெளியாகி ஒரு வாரம் ஆகியுள்ளது. இத்திரைப்படம் வெளியான முதல் நாளில் உலகளவில் ரூ.151 கோடிகளை வசூல் செய்திருந்தது. இத்திரைப்படம் வெளியான 4 நாட்களில் ரூ.400 கோடிகளுக்கும் மேல் வசூல் செய்ததாக அறிவிக்கப்பட்டது. இந்த நிலையில் தற்போது 7 நாட்களுக்கான வசூல் நிலவரம் குறித்த ஒரு தகவல் வெளியாகியுள்ளது.

பரிதாபகரமான வசூல் நிலவரம்…
அதாவது “கூலி” திரைப்படம் 7 நாட்களில் ரூ.435 கோடிகள் வரை வசூல் செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இத்திரைப்படம் ரூ.1000 கோடி வசூல் அடிக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் இத்திரைப்படம் வெளியாகி 7 நாட்கள் ஆகியுள்ள நிலையிலும் ரூ.435 கோடிகளையே வசூல் செய்துள்ளது ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. கடந்த இரண்டு நாட்களாக “கூலி” திரைப்படம் ஓடும் திரையரங்குகள் கூட்டம் வெகுவாக குறைந்துவிட்டதாகவும் கூறப்படுவது குறிப்பிடத்தக்கது.
