சஸ்பென்ஸ் கதாபாத்திரத்தை உடைத்த கூலி படக்குழு? ஆமிர்கான் ரோல் குறித்த வேற லெவல் அப்டேட்!

Author: Prasad
3 July 2025, 7:25 pm

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்துள்ள “கூலி” திரைப்படம் வருகிற ஆகஸ்ட் மாதம் 14 ஆம் தேதி வெளிவரவுள்ளது. இதில் ரஜினிகாந்துடன் ஸ்ருதிஹாசன், சௌபின், சத்யராஜ், நாகர்ஜுனா, உபேந்திரா உட்பட பலரும் நடித்துள்ளனர். அனிருத் இத்திரைப்படத்திற்கு இசையமைத்து வருகிறார். சன் பிக்சர்ஸ் இத்திரைப்படத்தை தயாரித்து வருகிறது. 

coolie movie aamir khan role update announced

இந்த நிலையில் இத்திரைப்படத்தில் ஆமிர்கான், கேமியோ ரோலில் நடிக்கவுள்ளதாக பல மாதங்களாகவே செய்திகள் வெளிவந்தன. எனினும் சென்ற மாதம் இந்த செய்தியை ஒரு பேட்டியில் உறுதிபடுத்தினார் ஆமிர்கான். 

அந்த வகையில் “கூலி” திரைப்படத்தின் இதுவரை அறிவிக்கப்படாத சஸ்பென்ஸ் கதாபாத்திரத்தை தற்போது அறிவித்துள்ளது சன் பிக்சர்ஸ். அதாவது ஆமிர்கானின் கதாபாத்திரத்தை குறித்த அறிவிப்பு தற்போது வெளிவந்துள்ளது. இதில் ஆமிர்கான் Dahaa என்ற கதாபாத்திரத்தில் நடித்துள்ளதாக அறிவிப்பு வெளிவந்துள்ளது. இது குறித்தான ஆமிர்கான் இடம்பெற்ற அட்டகாசமான போஸ்டர் ஒன்றும் வெளிவந்துள்ளது.  

  • ssmb29 movie digital rights bagged by netflix அறிவிப்பு வெளிவருவதற்கு முன்பே ஓடிடியில் விற்பனையான ராஜமௌலி திரைப்படம்? என்னப்பா சொல்றீங்க!
  • Leave a Reply