இனிமே ரஜினிதான் GOAT; கிளம்புங்க- விஜய் படத்தின் மொத்த வசூலை ஓவர்டேக் செய்த கூலி!
Author: Prasad23 August 2025, 11:41 am
கலவையான விமர்சனம், ஆனால்?
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்துள்ள “கூலி” திரைப்படம் கடந்த ஆகஸ்ட் மாதம் 14 ஆம் தேதி வெளிவந்து ரசிகர்களின் மத்தியில் கலவையான விமர்சனங்களை பெற்றது. எனினும் பாக்ஸ் ஆஃபிஸில் கலக்கி வருகிறது.
“கூலி” திரைப்படம் வெளியாகி தற்போது வரை 9 நாட்கள் ஆகியுள்ளன. முதல் 4 நாட்கள் பாக்ஸ் ஆஃபீஸில் வசூல் சூறாவளி போல் இருந்தது. அதன் பின் கொஞ்சம் கொஞ்சமாக வேகம் குறைந்தது. ஆனாலும் இத்திரைப்படத்தின் வசூல் அதிகரித்துக்கொண்டேதான் வருகிறது. அந்த வகையில் தற்போது இத்திரைப்படத்தின் வசூல் விஜய்யின் “GOAT” திரைப்படத்தின் மொத்த வசூலை முறியடித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

விஜய்யின் சாதனையை முறியடித்த ரஜினி?
அதாவது “கூலி” திரைப்படம் தற்போது வரை ரூ.455 கோடிகள் வசூல் செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதன் மூலம் “GOAT” திரைப்படத்தின் வசூலை ஓவர் டேக் செய்துள்ளது “கூலி”. விஜய்யின் “GOAT” திரைப்படம் ரூ.440 கோடிகள் வசூல் செய்திருந்தது குறிப்பிடத்தக்கது.
இச்செய்தி ரஜினி ரசிகர்களை உற்சாகத்தில் ஆழ்த்தியுள்ளது. இனி ரஜினிதான் GOAT என இணையத்தில் கருத்து தெரிவித்து வருகின்றார். இது விஜய் ரசிகர்களை சற்று கடுப்பில் ஆழ்த்தியுள்ளது.
