கூலி பட ரசிகர்களே உஷார்! போலி டிக்கெட்டுகளை வாங்கி ஏமாந்துப்போன சம்பவம்…
Author: Prasad13 August 2025, 1:28 pm
எகிறும் எதிர்பார்ப்பு
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்துள்ள “கூலி” திரைப்படம் நாளை திரையரங்குகளில் வெளியாகவுள்ள நிலையில் ரசிகர்கள் பலரும் இத்திரைப்படத்திற்காக வெறிகொண்டு காத்திருக்கின்றனர். இப்போதே மேள தாளம் பட்டாசு எல்லாம் தயாராக இருக்கிறது.
நாளை “கூலி” திரைப்படம் வெளியாகும் நாளை திருவிழா போல் கொண்டாட ரஜினிகாந்த் ரசிகர்கள் தயாராகி வருகிறார்கள். “கூலி” திரைப்படத்தின் முன் பதிவு டிக்கெட்டுகள் அசுர வேகத்தில் மளமளவென விற்றுத் தீர்ந்து வரும் நிலையில் ரசிகர்களுக்கு ஒரு அதிர்ச்சி தகவல் ஒன்று வெளிவந்துள்ளது.

போலி டிக்கெட்டுகள்
அதாவது தமிழ் நாட்டின் பல இடங்களில் ரசிகர்களின் எதிர்பார்ப்பை பயன்படுத்தி ரூ.3000 வரை டிக்கெட் விற்கப்படுவதாக புகார் எழுந்துள்ளது. அது மட்டுமல்லாது “கூலி” திரைப்படத்தின் போலி டிக்கெட்டுகள் விற்பனை செய்யப்படுவதாகவும் புகார்கள் எழுந்து வருகின்றன. அந்த வகையில் ரசிகர்கள் பலரும் கவனமாக இருக்குமாறு பலரும் எச்சரித்து வருகின்றனர்.
“கூலி” திரைப்படத்தில் ரஜினிகாந்துடன் ஸ்ருதிஹாசன், சத்யராஜ், நாகர்ஜுனா, உபேந்திரா, சௌபின் சாஹிர் உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். இத்திரைப்படத்தில் ஆமிர்கான் சிறப்பு தோற்றத்தில் நடித்துள்ளார். சன் பிக்சர்ஸ் தயாரித்துள்ள இத்திரைப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார்.
