ரசிகர்களின் வேண்டுகோளுக்கு இணங்க? மீண்டும் டைட்டிலை மாற்றிய கூலி படக்குழு!

Author: Prasad
26 June 2025, 7:15 pm

மஜதூராக மாறிய கூலி

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகியுள்ள “கூலி” திரைப்படம் வருகிற ஆகஸ்ட் மாதம் 14 ஆம் தேதி வெளிவரவுள்ளது. இத்திரைப்படத்தில் ரஜினியுடன் ஸ்ருதிஹாசன், சௌபின், நாகர்ஜுனா, சத்யராஜ், உபேந்திரா உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். அனிருத் இத்திரைப்படத்திற்கு இசையமைத்து வருகிறார். 

இந்த நிலையில் நேற்று இத்திரைப்படத்தின் “Chikitu” பாடல் வெளியானது. இதில் அனிருத்தும் டி ராஜேந்தரும் நடனமாடியிருந்தார்கள். இப்பாடல் ரசிகர்களின் மத்தியில் Vibe-ஐ உருவாக்கியுள்ளது.

coolie movie hindi title changed again

“கூலி” திரைப்படம் தமிழ் மட்டுமல்லாது தெலுங்கு, கன்னடம், ஹிந்தி போன்ற மொழிகளிலும் வெளியாகவுள்ளது. இந்த நிலையில் இத்திரைப்படத்தின் ஹிந்தி வெர்ஷனுக்கு “மஜதூர்” என பெயர் மாற்றப்பட்டது. ஏற்கனவே அமிதாப் பச்சன், வருண் தவான் ஆகியோர் தலா ஒரு “கூலி” படத்தில் நடித்துள்ளதால் இவ்வாறு பெயர் மாற்றப்பட்டுள்ளதாக தகவல் வெளிவந்தது. 

மீண்டும் மாற்றப்பட்ட டைட்டில்

இந்த நிலையில் தற்போது “கூலி” திரைப்படத்தின் 50 Days Countdown போஸ்டர் ஒன்று வெளிவந்துள்ளது. “கூலி”  திரைப்படம் வெளியாக இன்னும் 50 நாட்களே உள்ள நிலையில் இப்போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது. இதில் ஹிந்தி போஸ்டரில் “கூலி தி பவர் ஹவுஸ்” என்று தலைப்பு மாற்றப்பட்டுள்ளது. 

“மஜதூர்” என்ற தலைப்பு ஹிந்தி ரசிகர்களிடையே வரவேற்பை பெறவில்லை. “தயவு செய்து கூலி என்றே மாற்றிவிடுங்கள். அதுதான் பொருத்தமாக இருக்கும்” என வேண்டுகோள் வைத்து வந்தனர். அந்த வகையில் தற்போது “கூலி தி பவர் ஹவுஸ்” என்ற தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. 

  • G.V. Prakash understood Sainthavi at the time of separation.. Affection blossomed during the divorce case பிரியும் நேரத்தில் சைந்தவியை புரிந்து கொண்ட ஜி.வி பிரகாஷ்.. விவாகரத்து வழக்கில் மலர்ந்த பாசம்!