ரசிகர்களுக்கு திடீர் சர்ப்ரைஸ் கொடுத்த கூலி படக்குழு? இவ்வளவு Hype ஏத்துறாங்களே!

Author: Prasad
12 August 2025, 7:08 pm

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்துள்ள “கூலி” திரைப்படம் வருகிற ஆகஸ்ட் 14 ஆம் தேதி வெளிவரவுள்ளது. இத்திரைப்படத்திற்கு ரசிகர்களின் மத்தியில் அதிகளவு வரவேற்பு உள்ளது. இத்திரைப்படத்தில் ரஜினிகாந்துடன் ஸ்ருதிஹாசன், சௌபின் சாஹிர், சத்யராஜ், நாகர்ஜுனா, உபேந்திரா, ஆமிர்கான் உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். இத்திரைப்படத்தை சன் பிக்சர்ஸ் தயாரித்துள்ளது, அனிருத் இத்திரைப்படத்திற்கு இசையமைத்துள்ளார். 

இத்திரைப்படத்தின் டிரெயிலர் அதிகளவு வரவேற்பை பெற்ற நிலையில் தற்போது இத்திரைப்படத்தின் புதிய புரொமோ ஒன்று வெளியாகியுள்ளது. இதில் பல புதிய காட்சித் துணுக்குகள் இடம்பெற்றுள்ளன. 

இத்திரைப்படம் வெளியாக இன்னும் இரண்டு நாட்களே உள்ள நிலையில் தற்போது இந்த புதிய புரொமோ வெளிவந்துள்ளது ரசிகர்கள் பலரையும் உற்சாகத்தில் ஆழ்த்தியுள்ளது. 

அது மட்டுமல்லாது “கூலி” திரைப்படம் வெளியாகும் நாளான ஆகஸ்ட் 14 ஆம் தேதி மட்டும் காலை 9 மணி சிறப்பு காட்சிக்கு அனுமதி அளித்துள்ளது தமிழக அரசு. “கூலி” திரைப்படம் வெளியாகும் முதல் நாளில் மட்டும் காலை 9 மணி முதல் இரவு 2 மணி வரை என ஒரு ஐந்து காட்சிகள் திரையரங்குகளில் திரையிட அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

  • G.V. Prakash understood Sainthavi at the time of separation.. Affection blossomed during the divorce case பிரியும் நேரத்தில் சைந்தவியை புரிந்து கொண்ட ஜி.வி பிரகாஷ்.. விவாகரத்து வழக்கில் மலர்ந்த பாசம்!