படம் வெளியாவதற்கு முன்பே 170 கோடி லாபம்? கூலி படத்தின் அதிரிபுதிரியான பிசினஸ்…
Author: Prasad11 August 2025, 12:04 pm
டிக்கெட் புக்கிங்கில் அதிரடி
“கூலி” திரைப்படம் வெளியாக இன்னும் 3 நாட்களே உள்ள நிலையில் டிக்கெட் முன்பதிவில் அதிரடி காட்டி வருகிறது. முன் பதிவு தொடங்கப்பட்ட சில நிமிடங்களில் இந்த வாரத்திற்கான டிக்கெட்டுகள் மளமளவென விற்றுத் தீர்ந்தன. டிக்கெட் கிடைக்காத பலரும் சோகத்தில் மூழ்கியுள்ளனர்.
லோகேஷ் கனகராஜ்-ரஜினிகாந்த் கூட்டணியில் உருவான இத்திரைப்படத்திற்கு அதிகளவு எதிர்பார்ப்பு இருந்து வருகிறது. இந்த நிலையில் இத்திரைப்படம் வெளியாவதற்கு முன்பே ரூ.175 கோடி லாபம் பார்த்துள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

100 கோடி லாபம்?
அதாவது “கூலி” திரைப்படத்தின் பட்ஜெட் ரூ.355 கோடி என கூறப்படுகிறது. இந்த நிலையில் இத்திரைப்படத்தின் திரையரங்கு, சாட்டிலைட் மற்றும் ஓடிடி ஆகிய உரிமங்கள் மொத்தம் ரூ.530 கோடிக்கு வியாபாரம் ஆகியுள்ளதாம். அந்த வகையில் படம் வெளியாவதற்கு முன்பே சன் பிக்சர்ஸ் நிறுவனம் ரூ.175 கோடி லாபம் பார்த்துள்ளது.
சன் பிக்சர்ஸ் தயாரித்துள்ள “கூலி” திரைப்படம் வருகிற ஆகஸ்ட் 14 ஆம் தேதி தமிழ், தெலுங்கு, கன்னடம், ஹிந்தி ஆகிய மொழிகளில் வெளியாகியுள்ளது. இத்திரைப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். இதில் ரஜினிகாந்துடன் ஸ்ருதிஹாசன், நாகர்ஜுனா, சத்யராஜ், உபேந்திரா, சௌபின் சாஹிர் உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். இத்திரைப்படத்தின் அட்டகாசமான டிரெயிலர் ரசிகர்களை ஈர்த்துள்ளது. இத்திரைப்படம் வெளியாகும் நாளை நோக்கி ரசிகர்கள் மிகுந்த ஆவலுடன் காத்துக்கொண்டிருக்கின்றனர்.
