மோனிகாவாக மோகினி ஆட்டம் ஆடப்போகும் பூஜா ஹெக்டே? கூலி படத்தின் இரண்டாவது சிங்கிள் அப்டேட்!
Author: Prasad9 July 2025, 6:23 pm
பட்டையை கிளப்பிய முதல் சிங்கிள்
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்துள்ள “கூலி” திரைப்படம் வருகிற ஆகஸ்ட் மாதம் 14 ஆம் தேதி வெளியாகவுள்ளது. இந்த நிலையில் இத்திரைப்படத்தில் அனிருத்தின் இசையில் இடம்பெற்ற “Chikitu” பாடல் வெளியாகி பட்டி தொட்டி எங்கும் பட்டையை கிளப்பியது. இந்த பாடலில் டி ராஜேந்தர் நடனமாடியிருந்தார்.
இரண்டாவது சிங்கிள் அப்டேட்!
இந்த நிலையில் தற்போது இரண்டாவது சிங்கிள் பாடல் குறித்த அப்டேட் வெளிவந்துள்ளது. அதாவது “கூலி” திரைப்படத்தின் இரண்டாவது சிங்கிள் பாடலான “மோனிகா” பாடல் வருகிற ஜூலை 11 ஆம் தேதி மாலை 6 மணிக்கு வெளியாகவுள்ளது. இதில் பூஜா ஹெக்டே நடனமாடியுள்ளார்.

“கூலி” திரைப்படத்தில் ரஜினிகாந்துடன் ஸ்ருதிஹாசன், சரத்குமார், உபேந்திரா, சௌபின் சாஹிர், நாகர்ஜுனா உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். இத்திரைப்படத்தை சன் பிக்சர்ஸ் தயாரித்துள்ளது.