அத்தனை வாட்டி சொல்லியும் கேட்காத தனுஷ்… மனதில் பட்டத்தை வெளிப்படையாக சொன்ன தமன்னா!

Author: Shree
4 August 2023, 9:47 am
dhanush tamannah
Quick Share

2005ம் ஆண்டு தனது 15 வயதில் பாலிவுட் திரைப்படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானவர் நடிகை தமன்னா. இதனைத் தொடர்ந்து, தமிழில் கேடி என்னும் திரைப்படத்தில் நடித்தார். இப்படத்தில் வில்லி கதாபாத்திரத்தில் நடித்த இவர், படையப்பா படத்தில் ரம்யா கிருஷ்ணன் போல இருந்ததாக ரசிகர்களும் பத்திரிக்கைகளும் வர்ணித்தது.

இதனைத் தொடர்ந்து, வியாபாரி படத்தில் எஸ்.ஜே.சூர்யா ஜோடியாக நடித்தார். பின்னர், கல்லூரி, படிக்காதவன், அயன், சுறா, பையா, கண்டேன் காதலை போன்ற திரைப்படங்கள் மூலம் தனது நேர்த்தியான நடிப்பு, பால் நிற தேகம் என ரசிகர்களை சுத்தலில்விட்டார். தமிழ் மட்டுமின்றி தெலுங்கு மற்றும் ஹிந்தி திரைப்படங்களிலும் முன்னணி ஹீரோக்களுக்கு ஜோடியாக நடித்து பிரபலமாக உள்ளார்.

இவர் நடிப்பில் கடைசியாக ஆக்ஷன் திரைப்படம் தமிழில் வெளிவந்தது. இதன்பின் தமிழில் எந்த ஒரு படத்திலும் தமன்னா நடிக்கவில்லை. ஆனால், ஹிந்தி மற்றும் தெலுங்கு ஆகிய மொழிகளில் பிஸியாக நடித்து வருகிறார். இந்தியில் தயாராகிய ஆந்தாலஜி படமாக லஸ்ட் ஸ்டோரி 2 படத்தில் நடித்து முகம் சுளிக்க வைத்தார். அதையடுத்து தற்போது ரஜினியின் ஜெயிலர் படத்தில் தமன்னா நடித்து வருகிறார்.

குறிப்பாக ஜெயிலர் படத்தில் காவாலா பாடலுக்கு தமன்னா போட்ட டான்ஸ் தமிழ்நாடு முழுக்க பரவலாக பேசப்பட்டது. தற்ப்போது பீக்கில் இருக்கும் நடிகைகள் லிஸ்டில் தமன்னாவும் இடம் பிடித்துவிட்டார். அதற்காகவே அவருக்கு அடுத்தடுத்த வாய்ப்புகள் கிடைத்து வருகிறது. இந்த பாடல் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பு பெற்று வருகிறது. குறிப்பாக அதில் தமன்னாவின் நடனம் எல்லோரையும் கவர்ந்து எக்கசக்க ரீல்ஸ் வீடியோக்கள் வெளியாகி சோஷியல் மீடியாக்களில் அனல் பறந்து வருகிறது.

ஜெயிலர் படத்தின் ப்ரோமோஷனுக்காக தொடர்ந்து பல பேட்டிகள் கொடுத்து வரும் நடிகை தமன்னா நடிகர் தனுஷ் குறித்து பேசியுள்ளார். எனக்கு மிகவும் பிடித்த நடிகர்களில் ஒருவர் தனுஷ், தனுஷ் மும்பைக்கு வரும்போது போன் பண்ணுங்க என்று சொல்லுவேன். ஆனால், அவர் பண்ணவே மாட்டார். அதனால் அவர் மீது எனக்கு கோபம் என அவர் பேசினார். தனுஷ் தமன்னா இணைந்து வேங்கை, படிக்காதவன் படத்தில் நடித்துள்ளனர். அந்த இரண்டு படமும் மாபெரும் ஹிட் பெற்றது குறிப்பிடத்தக்கது.

Views: - 606

0

0