திருட்டு பையன் பாலா… ‘சேது’ கதையை நான் எழுதி கொடுத்தேன் – பிரபல நடிகர் ஆதங்கம்!

Author: Shree
7 April 2023, 1:31 pm

தமிழ் சினிமாவின் விசித்திர இயக்குனர் பாலா தொடர்ந்து தன் படங்களில் நடிக்கும் நடிகர், நடிகைகளை நல்ல நடிப்பு வரவைக்க கொடுமை படுத்துவதாக பரதேசி படத்தில் நடித்த நடிகர்கள் புகார் கொடுத்து பரபரப்பை ஏற்படுத்தினர்.

அண்மையில் கூட பிதாமகன் மகன் பட தயாரிப்பாளர் வி.ஏ.துரையிடம் ரூ. 25 லட்சம் பணம் வாங்கிவிட்டு அவரை ஏமாற்றிவிட்டதாக கூறினார். அடுத்த இரண்டு நாட்களில் வணங்கான் படத்தில் நடித்த துணை நடிகைகளை சம்பளம் கொடுக்காமல் அவர்களை அடித்து உதைத்து கொடுமைப்படுத்திய விவகாரத்தில் சிக்கினார்.

தொடர்ந்து இப்படி பல பேரை ஏமாற்றி வயிற்றில் அடிச்சு பிழைப்பு நடத்தி வரும் பாலா தற்போது மீண்டும் ஒரு சர்ச்சையில் சிக்கியுள்ளார். பாலாவின் திரைப்பயணத்திற்கு பெரிதும் உதவிய நெருங்கிய நண்பனும் நடிகருமான ஆனந்தன் அதிர்ச்சியளிக்கும் வகையில் பேட்டி ஒன்று கொடுத்துள்ளார்.

அதில், நான் சூப்பர் ஸ்டார் ரஜினியின் தீவிர ரசிகன் அவருக்காக தான் நடிக்கவேண்டும் என ஆசை பட்டு சென்னைக்கு வந்தேன் நிறைய கஷ்ட்டப்பட்டு வாய்ப்பு தேடி பின் ரஜினியின் பணக்காரன் படத்தில் ஒரு சின்ன ரோலில் நடித்திருந்தேன்.

அதேபோல் விக்ரம் நடிப்பில் வெளியான சேது படத்தின் கதையை பாலா முதலில் வேண்டாம் என தூக்கி எறிந்தார். காரணம், இது ஒரு சைக்கோ படம். படம் இப்படி எல்லாம் எடுக்கக் கூடாது. ஹீரோ கல்லூரியில் படிக்கிறான். ஒரு பொண்ணை வலுக்கட்டாயமாக காதலிக்க சொல்கிறான். இதெல்லாம் மக்கள் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள். சைக்கோ தனமாக இருக்கிறது விட்டுடு என்று பாலாவிடம் சொன்னேன்.

பின்னர் அவனுக்காக நான் மெனக்கிட்டு அந்த கதையை நீட்டா எழுதி கொடுத்தேன். பின்னர் படம் வெளியாகி சூப்பர் ஹிட் அடித்தது. அந்த மகிழ்ச்சியோடு அவனை சந்திக்க சென்றேன்.ஆனால் அவன் மாறிவிட்டான். என்னை ஒரு மனுஷனாகவே மதிக்கவில்லை அவாய்ட் பண்ணிக்கொண்டே இருந்தேன். 3 மாதம் நாய் போல் நின்று வாய்ப்பு கேட்டேன் பின்னர் சூர்யாவின் ஏதோ ஒரு படத்தில் நடிக்க வைத்தான். அதன் பின்னர் துரத்திவிட்டான்.

வறுமையில் வாடினேன். வயிற்று பிழைப்புக்காக ஏதேதோ வேலை செய்தேன். பின்னர் குடும்பம் குட்டி என ஆகிவிட்டது. வறுமையை போக்க இன்று இப்படி சாலை ஓரங்களில் கண்ணாடி விற்கிறேன். பாலா மிகவும் மோசமானவன் பாரபட்சம் பார்க்கமாட்டான் என ஆதங்கத்துடன் கூறியுள்ளார்.

  • yogi babu explains about not attended gajaana audio release function பொய் பொய்யா பேசாதீங்க- தரக்குறைவாக பேசிய தயாரிப்பாளருக்கு யோகி பாபு பதிலடி!