‘இதுக்கு பருத்தி மூட்டை குடோன்லயே இருந்திருக்கலாம்’.. – படவாய்ப்பு இல்லாமல் காணாமல் போன பிக்பாஸ் டைட்டில் வின்னர்ஸ்..!

Author: Vignesh
7 April 2023, 1:30 pm
Quick Share

விஜய் டிவியில் கடந்த 6 ஆண்டுகளாக உலக நாயகன் கமல் ஹாசனால் தொகுத்து வழங்கப்பட்டு வந்த நிகழ்ச்சி பிக்பாஸ். கடந்த ஆண்டு முடிந்த பிக்பாஸ் சீசன் 6 டைட்டில் வின்னராக அசீம் கைப்பற்றி இருந்தார். ஆனால் டைட்டில் வின் பண்ணினாலும் சினிமாவில் வாய்ப்பு கிடக்காமல் இருந்து வருகிறார். இவரை போன்றே டைட்டில் வின் செய்தும் வாய்ப்பு கிடைக்காமல் காணாமல் போனவர்களும் இருக்கிறார்கள்.

ஆரவ் நபீஸ்

arav nafeez-updatenews360


முதல் சீசனில் ஆரவ் நபீஸ் டைட்டிலை கைப்பற்றி ஒருசில படங்களில் நடித்திருந்தாலும் போதிய வரவேற்பு பெறாமல் இருந்து வருகிறாராம்.

ரித்விகா


பிக்பாஸ் இரண்டாம் சீசனில் டைட்டில் வின்னரான ரித்விகா, இந்நிகழ்ச்சி முன் ஒருசில படங்களில் நடித்து வந்தார். ஆனால் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பின் ஆள் அடையாளம் தெரியாமல் காணாமல் போய்விட்டார்.

முகன் ராவ்


முகன் ராவ் மலேசியாவில் இருந்து சென்னைக்கு வந்து தன்னுடைய பாடல்கள் மூலம் அனைவரையும் ஈர்த்த 3வது சீசனில் கலந்து கொண்டு டைட்டில் வின்னராகினார். அதன்பின் ஒருசில படங்களில் நடித்தும் அவரால் பெரிய வரவேற்பை பெறமுடியவில்லை. தற்போது ஆல்பம் பாடல்களில் மட்டுமே கவனம் செலுத்தி வருகிறார்.

ஆரி அர்ஜுனன்

Aari Arujunan-updatenews360


ஆரி அர்ஜுனன் மக்கள் மத்தியில் அதிக கவனத்தை ஈர்த்து சீசன் 4ன் டைட்டில் வின்னராகியவர். மக்கள் மனதை ஈர்த்து வந்தாலும் அவருக்கு ஏற்ற படவாய்ப்பு கிடைக்காமல் காணாமல் போனார்.

ராஜு ஜெயமோகன்


5வது சீசனில் சீரியல் நடிகராகவும் விஜேவாகவும் பணியாற்றிய ராஜு ஜெயமோகன் கலந்து கொண்டு கோப்பையை கைப்பற்றினார். அதன்பின் அதே தொலைக்காட்சியில் ராஜு வீட்ல பார்ட்டி என்ற நிகழ்ச்சியை கொடுத்து வரவேற்பு பெறாமல் போனது. இதன்பின் அவர் பட நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி வாய்ப்பில்லாமல் இருந்து வருகிறார். பேசாமல் சீரியல் நடிகராகவே இருந்திருக்கலாம் என்றும் விமர்சிக்கப்பட்டார்.

அசீம்

azeem - updatenews360


சமீபத்தில் நடந்து முடிந்த பிக்பாஸ் சீசன் 6ன் டைட்டில் வின்னரான அசீம் சீரியல் நடிகராக இருந்து வந்தபோது கொஞ்சம் நல்ல பெயரை பெற்று வந்தார். ஆனால் நிகழ்ச்சிக்கு பின் சில சர்சசைகளில் சிக்கி பெயரை கெடுத்துகொண்டதோடு படவாய்ப்பினை பெறாமல் பத்துபைசாவுக்கு பிரயோஜனம் இல்லாமல் மாறிவிட்டது குறிப்பிடத்தக்கது.

Views: - 310

1

0