ஜருகண்டி ஜருகண்டி.. பிரம்மாண்ட இயக்குனர் ஷங்கருக்கு இந்த நிலைமையா?..!

Author: Vignesh
29 March 2024, 1:58 pm

இந்தியத் திரையுலகின் முன்னணி இயக்குனர்கள் என்று சொன்னால் விரல்விட்டு எண்ணும் வகையில் சில இயக்குனர்கள் மிஞ்சுவார்கள். அதில் முக்கியமான இயக்குனர் என்று பார்த்தால் இயக்குனர் ஷங்கர். இவரின் படங்கள் தமிழைத் தாண்டி பல மொழிகளிலும் வரவேற்பைப் பெற்றுள்ளன.

ஈடு இணை இல்லாத இயக்குனராக திகழ்ந்த ஷங்கர் எந்திரன் படத்தின் மூலமாக தமிழ் சினிமாவை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் சென்றார் என்று சொல்லலாம். ஆனால், முன்பு போல் இன்று மார்க்கெட் இல்லை என்பதுதான் வருத்தத்திற்குரிய விஷயம். அதோடு, சங்கர் படங்கள் என்றாலே, பாடல்கள் பட்டைய கிளப்பும். அந்த வகையில், சமீபத்தில் ராம் சரணை வைத்து அவர் இயக்கிய இயக்கி வரும் கேம் சேஞ்சர் படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் வெளிவந்தது.

shankar

இந்த பாடல் மிகப்பெரும் ட்ரோல்களை தற்போது சந்தித்து வருகிறது. அதோடு, ஷங்கர் பட பாடல்கள் என்றால், புகை பிடிக்க கூட வெளியே போகாத ஒரு கூட்டம் இருக்க, தற்போது, இந்த பாடலுக்கு எல்லோரும் தியேட்டரையே, காலி செய்து விட்டார்கள் என்று கலாய்த்து வருகின்றனர். ஜருகண்டி ஜருகண்டி என்று தொடங்கும் இந்த பாட்டு லைனை போலவே இந்த பாடலின் ரிசல்ட் அமைந்துவிட்டது என்று பலரும் கிண்டல் அடித்து வருகின்றனர்.

  • tourist family negative review from valaipechu team படம் வர்ரதுக்கு முன்னாடியே நெகட்டிவ் விமர்சனம்; டூரிஸ்ட் ஃபேமிலி குறித்து வாய்விட்ட பிரபலம்!