மகாநதி சீரியலில் இருந்து திடீரென விலகிய பிரபல நடிகை.. மருத்துவமனையில் அட்மிட்..!

Author: Vignesh
6 August 2024, 5:55 pm

2023 ஆம் ஆண்டு இயக்குனர் பிரவீன் பென்னட் இயக்கத்தில் விஜய் டிவியில் ஒளிபரப்பான சீரியல் மகாநதி 4 தங்கைகளின் பாசத்தை உணர்த்தும் வகையில் அழகான குடும்பக் கதையாக ஒளிபரப்பாகிக் கொண்டு வருகிறது.

தற்போது, காவிரி,விஜய், நிவின் இவர்களின் காதல் பிரச்சனை எப்படி முடிவுக்கு வரப்போகிறது என்பதுதான் இந்த சீரியல் ரசிகர்களின் பெரிய கேள்வியாக இருந்து வருகிறது. நிவின் இன்றைய எபிசோட்டில் விஜய் தன்னிடம் கூறிய விஷயத்தை காவிரியிடம் தெரிவித்து விடுகிறார்.

இதனை கேட்டு ஷாக் ஆகும் காவேரி இந்த எண்ணத்தை கைவிட்டு விடுங்கள் என நிவினிடம் கட்டன் ரைட்டாக கூறிவிட்டு சென்று விடுகிறார். இந்நிலையில், இந்த தொடர் ஆரம்பத்தில் இருந்து கங்கா கதாபாத்திரத்தில் பிரதீபா என்பவர் நடித்து வந்தார். ஆனால், அவர் சில காரணங்களால் வெளியேறிய நிலையில் பாக்கியலட்சுமி தொடரில் ஜெனியாக நடித்து வந்த திவ்யா கணேஷ் மகாநதி சீரியலில் கங்காவாக நடிக்க கமிட்டாகி நடித்து வந்தார்.

இப்போதுதான் கங்கா குமரன் காட்சிகள் கொஞ்சம் ரீச் ஆனது. அதற்குள் மகாநதி தொடரிலிருந்து, திவ்யா கணேஷ் விலகுவதாக இன்ஸ்டா ஸ்டோரியில் பதிவு செய்துள்ளார். அதாவது, அவர் டெங்கு காய்ச்சலால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதனால், தான் மகாநதி தொடரில் நடிக்க முடியாமல் போகிறது எனது கதாபாத்திரத்திற்காக வேறொரு நடிகை அவர்கள் தேட வேண்டும் அதற்கு மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன் என்று பதிவிட்டுள்ளார்.

  • producers not accept to produce ajith kumar 64th movie அஜித்குமாரின் கண்டிஷனை கேட்டு தெறித்து ஓடும் தயாரிப்பாளர்கள்? அப்படி என்னதான் சொல்றாரு!