தமிழ் சினிமாவில் வெளிவரும் பெரும்பாலான திரைப்படங்களில் இளம் நடிகர்களின் ஹீரோக்களின் அம்மாவாக நடித்து பெரும் புகழ்பெற்றவர் தான் அந்த அம்மா நடிகை. தொடர்ச்சியாக பல முன்னணி நடிகர்களின் திரைப்படங்களில் அம்மாவாகவே நடித்து வந்தார்.
கேரளாவை சொந்த ஊராகக் கொண்ட இவர் சினிமாவில் வரவே கூடாது என அவரது குடும்பத்தினர் விரும்பினர். காரணம் அந்த அம்மா நடிகையின் தந்தை ஒரு மிகப்பெரிய இயக்குனராக இருந்து வந்தார். அதனால் சினிமாவில் நடிகைகளுக்கு நடக்கும் அட்ஜஸ்ட்மெண்ட் தொல்லை உள்ளிட்ட எல்லாமே அவருக்கு தெரியும்.
அதனால் தன்னுடைய மகளை சினிமா பக்கமே அனுப்பக்கூடாது என்பதில் முனைப்புடன் இருந்து வந்தாராம் அவரின் தந்தை. ஆனால், தன் தந்தையின் நண்பரான தயாரிப்பாளர் ஒருவர் வீட்டுக்கு வரும்போது அந்த அம்மா நடிகையை பார்த்ததும் நீங்கள் சினிமாவில் நடிக்க முடியுமா? என்று கேட்டிருக்கிறார். உடனே அந்த அம்மா நடிகை அடம் பிடித்து நடித்தே ஆவேன்… நடித்தே தீருவேன்.. என்று தன்னுடைய அப்பாவின் சம்மதத்துடன் சினிமாவில் நடிக்க வந்தார்.
அறிமுகமான முதல் படமே நல்ல வரவேற்பை பெற்றது . ஆரம்பத்தில் ஹீரோயினாக நடித்து வந்த அந்த அம்மா நடிகை தன்னுடைய படத்தை இயக்கிய இயக்குனர் ஒருவரை காதலித்து ரகசியமாக திருமணம் செய்து கொண்டார். ஆனால், திருமணம் ஆன ஒரு வருடத்திலேயே அந்த இயக்குனர் குடியும் கூத்தமாக இருந்ததால் அவரை விவாகரத்து செய்து பிரிந்து விட்டார்.
பின்னர் சில திரைப்படங்களில் மீண்டும் நடித்த வந்தார். அந்த அம்மா நடிகை தன்னுடன் நடித்த பொன்னான நடிகர் ஒருவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு இரண்டு பெண் குழந்தைகள் இருக்கிறார்கள். 40 வயதை கடந்த பிறகு அந்த நடிகை அம்மா கேரக்டரில் நடிக்க ஆரம்பித்து தொடர்ச்சியாக பல வெற்றிகளையும் குவித்தார் .
அந்த சமயத்தில் அவருடன் நடிக்கும் இளம் ஹீரோக்கள் பலபேர் அவரை பதம் பார்த்து பந்தாட நினைத்திருக்கிறார்கள். இது தெரிந்து கொண்ட அந்த நடிகை சூட்டிங் ஸ்பாட்டிலே பல பேரை பயங்கரமாக திட்டி விட்டு தனக்கு நடிப்புதான் முக்கியம் என்பதில் குறிக்கோளாக இருந்துக் கொண்டிருக்கிறாராம்.
0
0