ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்ட நிலையில் தமிழகத்தில் படம் வெளியாவதில் மீண்டும் சிக்கல் : திரையரங்க உரிமையாளர்கள் திடீர் போர்க்கொடி!!

Author: Udayachandran RadhaKrishnan
1 December 2022, 9:58 pm

திரையரங்க உரிமையாளர்கள் படத்தை ரிலீஸ் செய்ய மறுப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஜேம்ஸ் கேமரூன் இயக்கத்தில், 2009-ல் திரைக்கு வந்த அவதார் படம் உலகம் முழுவதும் வசூல் சாதனை நிகழ்த்தியது. படத்தில் இடம்பெற்ற கற்பனை உலகமும், கிராபிக்ஸ் தொழில் நுட்பங்களும் ரசிகர்களை வியக்க வைத்தன.

தற்போது அவதார் படத்தின் இரண்டாம் பாகம் தயாராகி உள்ளது. படத்துக்கு அவதார்: தி வே ஆப் வாட்டர் என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது.

இப்படம் உலகம் முழுவதும் தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம், மலையாளம் ஆகிய இந்திய மொழிகள் உள்பட 160 மொழிகளில், டிசம்பர் 16 ஆம் தேதி வெளியாகவுள்ளது.

அவதார்: தி வே ஆப் வாட்டர்’ படத்தின் டிரைலரை படக்குழு வெளியிட்டுள்ளது. பெரும் எதிர்ப்பார்பில் உருவாகியுள்ள இப்படத்தின் டிரைலரில் ஆச்சரியப்படுத்தும் கிராபிக்ஸ் காட்சிகள் இடம்பெற்று ரசிர்களை வெகுவாக கவர்ந்துள்ளது.

இந்நிலையில் தமிழ்நாட்டில் இப்படத்தை தமிழ் டப்பிங்கில் வெளியிடும் விநியோக நிறுவனம், திரையரங்குகளிடம் அதிக அளவு பங்கு தொகையை கேட்பதால் திரையரங்க உரிமையாளர்கள் ஏற்க மறுப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

  • ilaiyaraaja used yuvan shankar raja tune in his song தனது மகன் போட்ட ட்யூனையே காப்பி அடித்த இளையராஜா? இப்படி எல்லாம் நடந்துருக்கா?