காதல் மனைவிக்கு பிரம்மாண்டமாக propose செய்த எருமசாணி விஜய் – படத்தையே மிஞ்சிட்டாங்களேப்பா!

Author: Shree
5 June 2023, 5:45 pm

சமீப நாட்களாக யூடியூப் சேனல்கள் மூலம் மிகப்பெரிய அளவில் பேமஸ் ஆனவர்கள் வெள்ளித்திரையில் அறிமுகம் ஆகி வருகிறார்கள். குறிப்பாக யூடியூபில் பல்வேறு குறும்படங்கள் வெளியாகிறது. அந்தவகையில் எரும சாணி யூடியூபில் விஜய் ஹாரிஜாவுட நடித்த பல்வேறு குறும்படங்கள் யதார்த்தமாக இன்றைய கால நடைமுறையை காமெடியாக சொல்லி ரசிகர்களை தன் பக்கம் இழுத்தது.

காமெடியான பேச்சு, நடிப்பு என மிக குறுகிய நாட்களிலேயே பேமஸ் ஆனவர் எருமசானி விஜய். அதன் மூலம் இவருக்கு திரைப்பட வாய்ப்புகளும் கிடைத்தது. நட்பே துணை , நான் சிரித்தால் மற்றும் அதர்வா நடிப்பில் வெளியான 100 ஆகிய படங்களில் காமெடியனாக நடித்து ரசிகர்களின் கைத்தட்டல் பெற்றார்.

இந்நிலையில் விஜய் தான் பல வருஷங்களாக காதலித்து வந்த நக்ஷத்திரா என்ற பெண்ணை அண்மையில் பிரம்மாண்டமாக திருமணம் செய்துக்கொண்டார். நக்ஷத்திரா விஜய் ஆரம்பகாலத்தில் கஷ்டப்பட்டு வளர்ந்து வந்த சமயத்தில் எல்லாம் கூடவே இருந்து அவரது வளர்ச்சிக்கு பெரிதும் உதவியவர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் இவர்களது திருமண வீடியோ, சங்கீத் Function, திருமண ப்ரொபோஸ் உள்ளட்டவை பக்காவாக பிளான் போட்டு பிரம்மாண்டமாக நடந்துள்ளது. இதன் வீடியோக்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

  • actress kayadu lohar increased his salary double இதுதான் சரியான தருணம்-சமயம் பார்த்து உஷாராக சம்பளத்தை ஏற்றிய கயாது லோஹர்!