இனி ரஜினியே வந்து கதையை கேட்டாலும் அவர வெச்சு படம் எடுக்க மாட்டேன் : பொங்கிய பிரபல இயக்குநர்!!

Author: Udayachandran RadhaKrishnan
7 February 2023, 3:31 pm
Rajini Shankar - Updatenews360
Quick Share

தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக ஜொலிப்பவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். அவருக்கு சூப்பர் ஸ்டார் என்ற பட்டத்தை வழங்கியது ரசிகர்கள்.

ஸ்டைல், நடிப்பால் தமிழ் சினிமாவில் கொடிக்கட்டி பறந்து வருகிறார். எப்பவும் சூப்பர்ஸ்டாராக உள்ள ரஜினியை வைத்து படம் இயக்க இயக்குநர் தவமாய் தவமிருந்து வருகின்றனர்.

அந்த வகையில் தமிழ் சினிமாவின் பிரம்மாண்ட இயக்குநர் என பெயரெடுத்தவர் இயக்குநர் ஷங்கர். தனது படங்களில் உள்ள கதைக்களத்தை பிரம்மாண்டமாக காட்டும் திறமை இவருக்கு மட்டுமே உண்டு. இதனால் பட்ஜெட் எப்போதும் இவருக்கு படத்துக்கு எகிறிவிடும்.

ஜென்டில்மேன் படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமாகி, இந்தியன், காதலன், ஜீன்ஸ், முதல்வன், பாய்ஸ், அந்நியன், சிவாஜி, நண்பன், எந்திரன், 2.0 என அடுத்தடுத்த பிரம்மாண்டத்தை காட்டினார்.

ரஜினியை வைத்து மூன்று படங்களை இயக்கியுள்ளார். ரஜினிக்கு மிக நெருக்கமான, பிடித்தமான இயக்குநராக இருந்த ஷங்கர் ஒரு காலத்தில் ரஜினி மீது கோபமாக இருந்தார்.

அந்த கட்டத்தில் ரஜினியை வைத்து படம் இயக்கவே மாட்டேன் என்பதில் உறுதியாக இருந்தார். முதல்வன் கதையை தயாரித்த ஷங்கர் முதலில் அணுகியது ரஜினியைத்தான். ஆனால் ரஜினி அந்த படத்தில் நடிக்க மறுத்துவிட்டார்.

பின்னர் சிவாஜி படத்தின் கதையை உருவாக்கிய போதும், அதிலும் நடிக்க ரஜினி மறுத்துவிட்டார். இதனால் கோபம் கொண்ட ஷங்கர், வைரமுத்துவிடம் இனிமேல் ரஜினியே என் வீட்டுக்கு வந்து கேட்டால் கூட அவரை வைத்து படம் இயக்க மாட்டேன் என கூறியுள்ளார்.

இதை வைரமுத்து அப்படியே ரஜினியிடம் ஒப்பித்து விட, சில மாதம் கழித்து ஏவிஎம் சரவணனிடம் ரஜினி பேசிக் கொண்டிருந்த போது, சார் ஒரு பெரிய படம் ஒன்று செய்வோம் என ரஜினி கூறியுள்ளார்.

உடனே ஏவிஎம் சரவணன், அதுக்கு ஷங்கர்தான் வேண்டும் என சொல்லியுள்ளார். அதற்கு ரஜினி, ஷங்கர் என் மீது கோபமாக இருக்கிறார், என்னை வைத்து படம் இயக்க மாட்டார் என கூறியிருக்கிறார் என தெரிவித்துள்ளார்.

இதைக் கேட்ட சரவணன், நான் பேசிட்டு சொல்றேன் என கூறியுள்ளார். ரஜினியும் ஓகே சொல்லிவிட, ஏவிஎம் சரவணனே நேராக சென்று ஷங்கரிடம் பேசி பின் ரஜினியை வைத்து சிவாஜி படத்தை உருவாக்கினர்

இந்த படம் மூலம் ஷங்கர் ரஜினியை கவர்ந்துள்ளார். இதையடுத்து எந்திரன், 2.0 என மூன்று திரைப்படக்ஙளை வைத்து இயக்கினார். இந்த தகவலை ஏவிஎம் சரவணனே ஒரு பேட்டியில் கூறியுள்ளார்.

Views: - 347

0

0