பகத் பாசிலுக்கு வந்த அரியவகை நோய்.. 41 வயதில் இது குணமாகுமா? டாக்டர் இப்படி சொல்லிட்டாரே..!

Author: Vignesh
28 May 2024, 3:55 pm

மலையாள படங்களின் மாஸ் ஹீரோவான நடிகர் ஃபகத் பாசில் மிகவும் டெடிகேஷனான நடிகர் என்பது நம்மில் பலருக்கும் தெரிந்த ஒன்று தான். தன் தந்தையின் அறிமுகத்துடன் சினிமாவில் வந்த இவர் படத்திற்கு படம் புது வித்தியாசமாய் நடிப்பில் மிரள வைத்தார். எந்த கதாபாத்திரங்கள் கொடுத்தாலும் அதை நன்றாக உளவாங்கி மிகச்சிறப்பாக நடித்து பெயர் வாங்குவார்.

fahadh faasil

நடிப்பு அரக்கனாக இவரை பார்த்து மிரண்டுபோனார்கள் சக மலையாள நடிகர்கள். தமிழில் கூட சூப்பர் டீலக்ஸ், வேலைக்காரன், புஷ்பா, விக்ரம் உள்ளிட்ட படங்களில் நடித்திருக்கிறார். தற்போது மாமன்னன் படத்தில் நடித்துள்ளார்.

fahadh-faasil-updatenews360

இந்நிலையில், படம் வெளியாகி கலையான விமர்சனத்தை பெற்று வந்தது. ஆனால், படம் தியேட்டரில் வெளியாகி கொண்டாடப்பட்டதை விட தற்போது ஓடிடியில், வெளியான பிறகு ரசிகர்கள் மிகுந்த ஆர்வத்தில் கொண்டாடி வந்தனர். அதிலும், ரத்னவேலு என்ற வில்லன் ரோலில் நடித்த பகத் பாசிலின் கேரக்டரை தான் கொண்டாடி வந்தனர்.

இந்நிலையில், தற்போது 41 வயதாகும் பஹத் பாசில் தனக்கு ஒரு நோய் வந்திருப்பதை மருத்துவர்கள் கண்டுபிடித்து இருப்பதாக தெரிவித்துள்ளார். ADHD என கூறப்படும் Attention-deficit/hyperactivity disorder என்ற நோய் அவருக்கு வந்திருக்கிறதாம். பொதுவாக குழந்தைகளுக்கு தான் இந்த நோய் வரும். ஆனால், பெரியவர்களுக்கு வந்தால் அதை சரி செய்வது கொஞ்சம் கடினமாக இருக்கும் என்று மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இதனால் ரசிகர்கள் கடும் அதிர்ச்சியில் உள்ளனர்.

  • G.V. Prakash understood Sainthavi at the time of separation.. Affection blossomed during the divorce case பிரியும் நேரத்தில் சைந்தவியை புரிந்து கொண்ட ஜி.வி பிரகாஷ்.. விவாகரத்து வழக்கில் மலர்ந்த பாசம்!