துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்ய முயன்ற பிரபல நடிகர் : பகீர் சம்பவம்!!

Author: Udayachandran RadhaKrishnan
7 February 2023, 9:15 pm
Gun - Updatenews360
Quick Share

துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்ய முயற்சித்த பிரபல நடிகரின் தகவல் பரபரப்பை ஏற்பட்டுள்ளது.

நந்தமுரி பாலகிருஷ்ணா பாலகிருஷ்ணா தொகுத்து வழங்கும் நிகழச்சியில் கலந்து கொண்ட நடிகரும், அரசியல்வாதியுமான பவன் கல்யாண் தனக்கு கடுமையான மனச்சோர்வு இருப்பதையும், அதை சமாளிப்பது அவருக்கு எவ்வளவு கடினமாக இருந்ததையும் வெளிப்படுத்தினார்.

மேலும், தனக்கு 17 வயதாக இருந்தபோது, தன் உயிரை மாய்த்துக் கொள்ள நினைத்ததாகவும் கூறினார். இது தொடர்பாக அவர் கூறியதாவது:- மனச்சோர்வுக்கான எனது போராட்டங்கள் அதிகமாக இருந்தன, ஆனால் நான் அதை எதிர்த்துப் போராடினேன்.

17 வயதில், தேர்வுகளின் அழுத்தம் காரணமாக என் மனச்சோர்வு கூட்டியது. என் மூத்த சகோதரனின் (சிரஞ்சீவி) உரிமம் பெற்ற ரிவால்வரைப் பயன்படுத்தி அவர் வீட்டில் இல்லாத நேரத்தில் என் உயிரை மாய்த்துக் கொள்ள திட்டமிட்டிருந்தேன்.

எனது மூத்த சகோதரர் நாகபாபு மற்றும் மைத்துனர் சுரேகா ஆகியோர் தன்னை காப்பாற்றினர். என் அண்ணன் (சிரஞ்சீவி) என்னிடம், ‘எனக்காக மட்டும் வாழுங்கள், நீங்கள் எதுவும் செய்யாவிட்டாலும் பரவாயில்லை.

ஆனால் தயவுசெய்து வாழுங்கள்’ என்று கூறினார். அப்போதிருந்து, நான் என்னை நானே கற்றுக்கொண்டேன், புத்தகங்களைப் படிப்பது, கர்நாடக இசை, தற்காப்புக் கலைகள் மற்றும் பிற முயற்சிகளில் ஆறுதல் கண்டேன் என கூறினார்.

Views: - 84

0

0