நயன்தாரா – விக்னேஷ் சிவனை மிஞ்சிய பிரபல நடிகையின் திருமணம் : வைரலாகும் புகைப்படங்கள்.. வாழ்த்தும் ரசிகர்கள்!!

Author: Babu Lakshmanan
8 February 2023, 9:25 am
Quick Share

தமிழ் சினிமாவில் ரஜினி, விஜய், அஜித், சூர்யா, விக்ரம், தனுஷ், சிம்பு, சிவகார்த்திகேயன் என பல உச்ச நடிகர்களுடன் இணைந்து ஏராளமான திரைப்படங்களில் நடித்து தற்போது தென்னிந்தியாவில் முன்னணி நடிகையாக கொடிகட்டிப் பறப்பவர் நயன்தாரா.

nayanthara-connect-interview-updatenews360

இவர் தனது நீண்ட நாட்களாக காதலரான இயக்குநர் விக்னேஷ் சிவனை, கடந்த ஆண்டு ஜுன் மாதம் சென்னை மாமல்லபுரத்தில் பிரமாண்டமான முறையில் திருமணம் செய்து கொண்டனர். அவர்களின் திருமணப் புகைப்படங்களை கூட, திரைப்படங்களின் போஸ்டர்களை வெளியிடுவது போன்று, மெல்ல மெல்ல வெளியிட்டனர்.

திருமணத்திற்கு வருபவர்களுக்கு பல்வேறு கட்டுப்பாடுகள் மற்றும் பிரமிக்க வைக்கும் உணவு வகைகள் என ஆடம்பரமாக நடைபெற்றது அவர்களின் திருமணம். இந்த நிலையில், நயன்தாரா – விக்னேஷ் சிவன் திருமணத்தை மிஞ்சும் விதமாக, பாலிவுட் நடிகையின் திருமணம் மிகவும் பிரமாண்டமாக நேற்று நடைபெற்றுள்ளது.

பாலிவுட் நடிகர் சித்தார்த் மல்ஹோத்ராவும், நடிகை கியாரா அத்வானியும் கடந்த சில ஆண்டுகளாக காதலித்து வருகின்றனர். இவர்களின் காதலுக்கு இருவீட்டு பெற்றோரும் சம்மதம் தெரிவித்தனர். அதன்படி, பிப்ரவரி 7ம் தேதி ராஜஸ்தான் மாநிலம் ஜெய்சால்மரில் உள்ள சூர்யஹர் அரண்மனை ஓட்டலில் இவர்களின் திருமணம் நடைபெறும் என இருவீட்டாரும் முடிவு செய்தனர்.

அதன்படி, இவர்கள் திருமணம் நேற்று மிகவும் பிரமாண்டமான முறையில் நடைபெற்றது. இதில் நெருங்கிய உறவினர்கள் மற்றும் கரண் ஜோஹர், ஷாகித் கபூர், ஜூஹி சாவ்லா உட்பட பல பாலிவுட் திரையுலகினர் கலந்து கொண்டனர்.

நயன்தாரா – விக்னேஷ் சிவன் திருமணம் போன்றே, இவர்களின் திருமணத்திற்கும் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.

குறிப்பாக, திருமணம் நடைபெறும் இடத்தின் உள்ளே பத்திரிக்கையாளர்கள் யாரும் அனுமதிக்கப்படவில்லை. திருமணத்தில் கலந்து கொண்டவர்கள் யாரும் செல்போன், கேமரா போன்றவை உபயோகிக்கவும் தடை விதிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

இதனால், கியாரா – சித்தார்த் திருமண புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் சமூக வலைத்தளத்தில் வெளியாகவில்லை. அவர்கள் வெளியிட்ட ஒருசில புகைப்படங்களே வெளியாகி வருகின்றனர்.

அதேபோல, விழாவில் இத்தாலி, சீனா, அமெரிக்கா, மெக்சிகன் உட்பட 100க்கும் மேற்பட்ட நாடுகளின் உணவு வகைகள் பரிமாறப்பட்டதாகக் கூறப்படுகிறது. சமூக வலைதளங்களில் புதுமணத் தம்பதிக்கு ரசிகர்களும் திரையுலகினரும் வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர்.

Views: - 263

5

2