14 வயசுல நடிக்க துவங்கிய ரம்யா கிருஷ்ணன்.. ராஜமாதாவின் இன்றைய மதிப்பு இத்தனை கோடியா..!

Author: Vignesh
25 April 2024, 4:47 pm

தமிழ் சினிமாவில் 80 90களில் கொடி கட்டி பறந்த நடிகைகளில் ரம்யா கிருஷ்ணனும் ஒருவர். இவர் தன்னுடைய 14 வயதில் சினிமாவில் அறிமுகமாகி முதல் படமே இவருக்கு பெரும் தோல்வி படமாக அமைந்தது. அதன் பிறகு ரம்யா கிருஷ்ணன் முதல் வசந்தம் படத்தில் நடித்து நல்ல வரவேற்பை பெற்றார்.

ramya krishnan - update news 360

மலையாளம், கன்னடம், ஹிந்தி என வாய்ப்புகள் தேடி வர, ரம்யாவின் புகழ் மேலும் விரிவடைந்தது. இளம் நடிகர்களான சிம்பு, ஷாம், நரேஷ் ஆகியோருடன் குத்தாட்டம் போட்டு பரபரப்பை ஏற்படுத்தியவர். அதன்பின் பல படங்களில் நடித்து வந்தாலும் ரம்யா கிருஷ்ணனுக்கு போதிய அங்கீகாரமும் அடையாளமும் கிடைக்கவில்லை என்று சொல்லலாம். இவர் பல ஆண்டுகள் கழித்து படையப்பாவின் நீலாம்பரியாக நடித்தது மிகப் பெரிய அளவில் இவருக்கு கை கொடுத்தது.

மேலும் படிக்க: படப்பிடிப்பில் நடந்த விபரீதம்.. விஜய்யின் கையில் ஏற்பட்ட பலத்த காயம்.. வைரல் போட்டோ..!

அதன் பிறகு பாகுபலி படத்தில் சிவகாமி தேவி மேலும் இவருக்கு அதிகப்படியான வரவேற்பு கொடுத்தது. இவரை அனைவரும் ராஜமாதாவாகவே கருதினர். இவரை தவிர யாராலும் அந்த கதாபாத்திரத்தில் கச்சிதமாக நடித்திருக்க முடியாது என்று சொல்லும் அளவிற்கு இவரது நடிப்பு அருமையாக இருந்தது. தற்போது ரம்யா கிருஷ்ணன் நடிப்பில் வெளியாகியுள்ள ஜெயிலர் படம் திரையில் வெற்றிகரமாக ஓடியது.

ramya krishnan - updatenews360

மேலும் படிக்க: ஒரு புடவை விலை இத்தனை லட்சமா?.. கீர்த்தி சுரேஷ் அணிந்து வந்த காஸ்ட்லி சேலை..!

இந்நிலையில், 14 வயதில் சினிமாவில் காலடி வைத்த ரம்யா கிருஷ்ணன் 53 வயதிலும் தொடர்ந்து படங்களில் நடித்து வருகிறார். ஒரு படத்தில் நடிக்க மூன்று முதல் நான்கு கோடி வரை சம்பளம் வாங்கி வருகிறாராம். மேலும், இவருடைய சொத்து மதிப்பு 98 கோடி இருக்கும் என சொல்லப்படுகிறது.

  • Fans Mock DD New Photos வயசானதால் ஞாபக மறதியா? DD போட்ட Photo.. கலாய்த்த நெட்டிசன்கள்!!
  • Views: - 524

    0

    0