ஊரு கண்ணே பட்டுருச்சு.. சுத்தி போடுங்க : அழகுல அம்மாவையே ஓரங்கட்டிய மகள்!!!

Author: Udayachandran RadhaKrishnan
7 February 2023, 7:31 pm
Surya Diya - Updatenews360
Quick Share

பிரபல நட்சத்திர தம்பதியின் மகளின் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

மும்பையை சேர்ந்தவரான நடிகை ஜோதிகா, முதலில் இந்தி படத்தில் நடித்தார். பின்னர் 1999-ம் ஆண்டு எஸ்.ஜே.சூர்யா இயக்கத்தில் வெளியான வாலி திரைப்படத்தின் மூலம் தமிழில் எண்ட்ரி கொடுத்தார்.

இப்படத்தில் நடிகர் அஜித்துக்கு ஜோடியாக சில காட்சிகளில் மட்டும் நடித்திருப்பார். ஜோதிகாவுக்கு அடுத்ததாக சூர்யாவுடன் ஜோடி சேரும் வாய்ப்பு கிடைத்தது.

இருவரும் இணைந்து பூவெல்லாம் கேட்டுப்பார் படத்தில் ஜோடியாக நடித்தனர். இப்படம் மூலம் தான் சூர்யா – ஜோதிகா இடையே நட்பு ஏற்பட்டு, பின்னர் அந்த நட்பு நாளடைவில் காதலாக மாறியது.

பின்னர் காக்க காக்க, சில்லுனு ஒரு காதல், பேரழகன், மாயாவி போன்ற படங்களிலும் இருவரும் ஜோடியாக நடித்தனர். சுமார் 6 ஆண்டுகள் உருகி உருகி காதலித்த இந்த ஜோடி கடந்த 2006-ம் ஆண்டு குடும்பத்தினர் சம்மதத்துடன் திருமணம் செய்துகொண்டது.

திருமணத்துக்கு பின் படங்களில் நடிப்பதை தவிர்த்து வந்தார் ஜோதிகா. இவருக்கு தியா என்கிற மகளும், தேவ் என்கிற மகனும் உள்ளனர். குழந்தைகள் இருவரும் வளர்ந்த பின்னரே சினிமாவில் தனது இரண்டாவது இன்னிங்சை தொடங்கினார் ஜோதிகா.
தற்போது மம்முட்டி உடன் மலையாளத்தில் காதல் என்கிற படத்தில் நடித்து முடித்துள்ளார். இதுதவிர இந்தியில் ஸ்ரீ என்கிற திரைப்படத்திலும் நடிக்க கமிட் ஆகியுள்ளார்.

இந்நிலையில், நடிகை ஜோதிகா தனது மகள் தியா மற்றும் மகன் தேவ் உடன் எடுத்துக்கொண்ட லேட்டஸ்ட் புகைப்படங்கள் வெளியாகி வைரலாகி வருகின்றன.

அதில் அழகில் அம்மாவுக்கே டஃப் கொடுக்கும் வகையில் ஹீரோயின் போல் காட்சியளிக்கிறார் தியா. அவர் கையில் நாய்க் குட்டி ஒன்றை பிடித்திருக்கும் கியூட்டான புகைப்படமும் வெளியாகி வைரலாகி வருகிறது.

ஜோதிகா மற்றும் தியாவின் லேட்டஸ்ட் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன.

Views: - 698

77

13