இனி அந்த இயக்குனர் பக்கமே தலை வைத்து படுக்கக் கூடாது.. சிம்பு எடுத்த அதிரடி முடிவு..! அப்போ அந்தபடம் அவ்வளவுதானா??..

Author: Vignesh
7 February 2023, 7:30 pm
Simbu - updatenews360
Quick Share

சிம்பு தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் முன்னணி நடிகர். இவர் நடிப்பில் பத்து தல படம் ரிலிஸுக்கு ரெடியாகி விட்டது. கௌதம் மேனன் இயக்கத்தில் சிம்பு நடிப்பில் உருவாகிய சூப்பர் ஹிட் அடித்துள்ள திரைப்படம் வெந்து தணிந்தது காடு.

நீண்ட நாட்களுக்கு பிறகு நடிகர் சிம்பு கேங்ஸ்டர் கதைகளத்தில் நடித்து ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்றுள்ளது. திரையரங்கில் வசூல் சாதனை படைத்து வருகிறது.

Simbu - updatenews360

இந்நிலையில், சிம்பு கெரியரில் மிக முக்கியமான படத்தை கொடுத்தவர் கௌதம் மேனன் என்று சொல்லலாம். சிம்பு மற்றும் கௌதம் மேனன் கூட்டணியில் கடைசியாக வந்த வெந்து தனிந்தது காடு ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றது.

ஆனால், யார் கண் பட்டதோ சிம்பு இனி கௌதம் பக்கம் தலை வைத்து கூட படக்க கூடாது என முடிவெடுத்து விட்டாராம். அதாவது இருவருக்கும் இடையே தற்போது மனஸ்தாபம் ஏற்பட்டுள்ளதாம். ஆதலால் இனி கௌதம் மேனன் திரைப்படங்களில் தான் நடிக்கப்போவதில்லை என்று சிம்பு முடிவெடுத்துள்ளாராம். இவ்வாறு ஒரு தகவல் தற்போது வெளிவருகிறது.

simbu - updatenews360

தற்போது வெளிவரும் செய்திகளை பார்த்தால் “வெந்து தணிந்தது காடு” திரைப்படத்தின் இரண்டாம் பாகத்திற்கே வாய்ப்பில்லை என்று கூறப்படுகிறது. மேலும் இவர்களுக்குள் என்ன ஆச்சு என்பதே தற்போது கோடம்பாக்கத்தின் கேள்வியாக உள்ளது.

Gowtham Menon Cover - updatenews360

Views: - 83

0

0