போட்டோக்களை போட்டு கோடிகளில் சம்பாதிக்கும் நடிகை.. அதுக்குன்னு ஒரு போட்டோவுக்கு இவ்வளவா..?

Author: Rajesh
23 April 2022, 8:05 pm

நடிகர்கள் சினிமாவில் நடிப்பதில் மூலம் பெறும் சம்பளத்தை விட விளம்பரத்தில் நடிப்பதன் மூலம் சம்பாதிப்பது தான் அதிகம் என கூறப்படுகிறது. இந்த பட்டியலில் விளையாட்டு வீரர்களும் அடங்குவார்கள்.

சமூக வலைத்தளங்களின் வளர்ச்சிக்கு பிறகு அதில் மில்லியன் கணக்கில் ரசிகர்கள் வைத்திருக்கும் நடிகர்கள் ஒரு போஸ்டுக்கு கோடிக்கணக்கில் வாங்க தொடங்கிவிட்டார்கள். பெரிய நிறுவனங்கள் விமம்பரத்திற்காக அதையும் தர தயாராக இருக்கின்றனர்.

இந்த நிலையில் தான், நடிகை ஆலியா பட் இன்ஸ்டாகிராமில் போட்டோ போட ஒரு கோடி ரூபாய் சம்பளமாக வாங்குகிறாராம். அவருக்கு 63.9 மில்லியன் ரசிகர்கள் இருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

அமிதாப் பச்சன் 26 மில்லியன் ரசிகர்கள் வைத்திருக்கும் நிலையில் அவருக்கு ஒரு போஸ்டுக்கு 50 லட்சம் ருபாய் கிடைக்கிறதாம். சர்வதேச அளவில் பாப்புலர் ஆன பிரியங்கா சோப்ரா ஒரு போஸ்டுக்கு 1.8 கோடி ருபாய் சம்பாதிக்கிறார் என்ற தகவல்கள் வெளியாகியுள்ளது.

  • enforcement department raid on allu aravind house பண மோசடி புகார்! அல்லு அர்ஜூனின் தந்தை வீட்டில் அமலாக்கத்துறை தீடீர் சோதனை?