முகம் , கன்னம் வீங்கிப்போய் ஒரு மாதிரியாக இருக்கும் விஜய் – அந்த நோய் தான் காரணமா?

Author: Rajesh
5 January 2024, 10:38 am

தமிழ் சினிமாவின் நட்சத்திர நடிகரான விஜய் தற்போது வெங்கட் பிரபு இயக்கத்தில் “The Greatest Of All Time (G.O.A.T)” என்கிற திரைப்படத்தில் நடித்து வருகிறார். இப்படம் வித்யாசமான கதைக்களத்தில் ஹாலிவுட் ரேஞ்சுக்கு உருவாகி வருகிறது. ஏ.ஜி.எஸ் நிறுவனம், கல்பாத்தி அகோரம் தயாரிக்கும் இப்படத்தில் பல்வேறு நட்சத்திர நடிகர் , நடிகைகள் நடிக்கின்றனர்.

யுவன்சங்கர் ராஜா இசையமைக்கும் இப்படத்திற்கு சித்தார்த்த முனி ஒளிப்பதிவு செய்கிறார்.இதில் பிரசாந்த், மோகன், பிரபுதேவா, ஜெயராம், கணேஷ், யோகிபாபு, அஜ்மல் அமீர், வைபவ், பிரேம்ஜி, அரவிந்த் ஆகாஷ், அஜய் ராஜ், சினேகா, லைலா, மீனாட்சி சவுத்ரி என ஒரு நட்சத்திரப் பட்டாளமே நடிக்கிறார்கள். இப்படத்தில் விஜய் வித்யாசமான லுக் இணையத்தில் வெளியாகி வைரலாகியது.

இதனிடையே திடீரென விஜய் விஜயகாந்த் மறைவுக்கு அஞ்சலி செலுத்த வந்தபோதும் , நிவாரண பொருட்களை வழங்கிய போதும் லைட்டான தாடியுடன் முகமெல்லாம் வீங்கி மொழும் மொழுக்கென இருந்தார். இந்த புகைப்படம் இணையத்தில் வெளியாக தளபதிக்கு என்ன ஆச்சு?என பலரும் கேட்க துவங்கிவிட்டனர்.

இந்நிலையில் அதற்கான காரணம் என்ன என்று மருத்துவ நிபுணர் மனோ கூறியிருக்கிறார். விஜய்யின் தொண்டையின் இரு பகுதிகளிலும் இருக்கும் தொரொக்ஸின் சுரப்பியில் கோளாறு ஏற்பட்டு இருக்கலாம் என்றும் இந்த சுரப்பி அதிகமாக சுரந்தால் கண்ணங்கள் வீக்கம் அடைவது வழக்கமான நிகழ்வு என்றும் தெரிவித்திருக்கிறார்.

ஏனென்றால் இந்த சுரப்பி அதிகமாக சுரந்தால் தான் கன்ன, முகம் வீக்கம் அடையும். அதே நேரத்தில் தொரொக்ஸின் குறைவாக சுரந்தாலும் இப்படித்தான் ஆகும். அந்த சமயத்தில் திடீரென உடல் எடை அதிகரிக்க கூடும் என அவர் தெரிவித்துள்ளார். ஆனால் இதை கேட்டு கடுப்பான விஜய் ரசிகர்கள் அப்படியெல்லாம் ஒன்றும் இல்லை விஜய் தளபதி 68 படத்தின் தோற்றத்திற்காக உடல் எடையை அதிகரித்திருப்பார் என்கிறார்கள். எது எப்படியோ அவர் விரைவில் குணமாகி வந்தால் சரி தான்.

  • bussy anand shouted tvk volunteers video viral on internet Chair-அ கீழ வைடா டேய்- விஜய் மீட்டிங்கில் கொந்தளித்து கத்திய புஸ்ஸி ஆனந்த்! வைரல் வீடியோ