இதெல்லாம் அதர பழசான கதை- கூலி படத்தை தொங்கவிட்டு வெளுத்த பிரபல விமர்சகர்…

Author: Prasad
14 August 2025, 3:35 pm

அரங்கம் அதிர வெளியான கூலி?

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்துள்ள “கூலி” திரைப்படம் இன்று வெளியாகியுள்ள நிலையில் ரசிகர்கள் பலரும் திரையரங்கை நோக்கி படையெடுத்து வருகின்றனர். படம் பார்த்த பலரும் ரஜினிகாந்தின் நடிப்பு அசத்தலாக இருப்பதாக கருத்து தெரிவித்து வருகின்றனர். எனினும் மொத்தமாக கொஞ்சம் கலவையான விமர்சனங்களே வெளி வருகின்றன. அந்த வகையில் பிரபல விமர்சகரான Filmi craft அருண் இத்திரைப்படத்தை விமர்சித்து வீடியோ வெளியிட்டுள்ளார். 

Filmi craft arun criticized coolie movie

இதெல்லாம் அதர பழசான கதை?

“கூலி படத்தில் அப்படி என்னதான் பிரச்சனை என கேட்டீர்களானால், முதலில் இந்த படத்தின் கதையே பிரச்சனைதான். இந்த படமெல்லாம் ரஜினிகாந்தின் பில்லா, ரங்கா போன்ற திரைப்படங்கள் வெளிவந்த காலகட்டத்திலேயே வந்திருக்க வேண்டிய படம். அவ்வளவு ஒரு அரத பழசான கதை. 

கதைக்களமாக பார்த்தால் இது ஒரு வழக்கமான சென்டிமன்ட் கலந்த ஆக்சன் படம்தான். இதெல்லாம் ஒரு 30 வருடங்களுக்கு முன்பே வர வேண்டிய படம். 

Filmi craft arun criticized coolie movie

கிளைமேக்ஸை தவிர படத்தில் சுவாரஸ்யமாகவோ பரபரப்பாகவோ திரைக்கதையில் எந்த நகர்வும் இல்லை. 

இதற்கு முக்கியமான காரணம் இந்த படத்திற்கு இவர்கள் செய்த Production Value. இருக்கின்ற மொத்த பணத்தையும் சம்பளமாக பிரித்து கொடுத்துவிட்டீர்கள் என்றால் படம் எடுப்பதற்கு எங்கே காசு இருக்கும்? ஹார்பருக்குள் இரண்டு காட்சிகள், வீட்டுக்குள் இரண்டு காட்சிகள், பின்னி மில்ஸ் மாதிரியான ஒரு செட்டை போட்டு அதற்குள் இரண்டு காட்சிகள் என மிகவும் சிம்பிளாக படத்தை எடுத்துவிட்டார்கள். இவர்கள் என்ன செலவே செய்யவில்லை போல என்று தோன்ற வைக்கிறது” என தனது விமர்சனத்தில் தெரிவித்துள்ளார். இவரது விமர்சனம் தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. 

  • G.V. Prakash understood Sainthavi at the time of separation.. Affection blossomed during the divorce case பிரியும் நேரத்தில் சைந்தவியை புரிந்து கொண்ட ஜி.வி பிரகாஷ்.. விவாகரத்து வழக்கில் மலர்ந்த பாசம்!