ரஜினியை வாடா என்று அழைத்த ஒரே காமெடி நடிகர்? அந்த அளவுக்கு கெத்தா இவரு?
Author: Prasad17 April 2025, 4:28 pm
சூப்பர் ஸ்டார்
கோலிவுட்டின் சூப்பர் ஸ்டாராக வலம் வரும் ரஜினிகாந்தை எவராவது நேரில் பார்த்தால் மரியாதை தானாக வரும் என்று கூறுவது உண்டு. அந்தளவுக்கு ஒரு ஈர்ப்பு சக்தியை கொண்டவர் ரஜினிகாந்த் என பல நடிகர்கள் கூறியுள்ளனர். இந்த நிலையில் ரஜினிகாந்தை வாடா போடா என்று அழைத்த ஒரே காமெடி நடிகர் என்று இவரை கூறுகிறார்கள்.

கவுண்ட்டர் மணி…
கோலிவுட் வரலாற்றில் கவுண்ட்டர் வசனங்களுக்கு பிள்ளையார் சுழி போட்டு வைத்தவர் கவுண்டமணி. சினிமாவிற்குள் வருவதற்கு முன்பு ஆயிரத்திற்கும் மேற்பட்ட மேடை நாடகங்களில் நடித்து வந்த கவுண்டமணி, சினிமாவிற்குள் நுழைந்து காமெடியில் தனக்கென ஒரு தனி இடத்தை பிடித்துக்கொண்டார். இந்த இணைய யுகத்திலும் அவரது காமெடி காட்சிகள் மீம் டெம்பிளேட்டுகளாக வலம் வருகின்றன. அந்த அளவுக்கு காமெடி லெஜண்டாக வலம் வருகிறார் கவுண்டமணி.

வாடா போடா என்று அழைத்த கவுண்டமணி
ரஜினிகாந்துடன் ஒரு திரைப்படத்தில் நடித்துக்கொண்டிருந்த சமயத்தில் கவுண்டமணி அவரை பேச்சு வாக்கில் வாடா போடா என்று சகஜமாக அழைத்துள்ளார். இதனை கவனித்துக்கொண்டிருந்த இயக்குனர் பி.வாசு, கவுண்டமணியிடம் சென்று மிகவும் மெதுவாக “ரஜினி சாரை நீங்க வாடா போடானு சொல்றது கொஞ்சம் இதுவா இருக்கு” என்று கூறினாராம். அதற்கு கவுண்டமணி, ரஜினியை குறிப்பிட்டு “அவன் அப்படி சொன்னானா?” என்று கேட்டாராம்.
கவுண்டமணி இவ்வாறு கேட்டது ரஜினியின் காதுகளுக்கு விழுந்தது. உடனே ரஜினிகாந்த் இவர்களி அருகில் வந்து “கவுண்டமணி என்னை விட சீனியர். அவரை அவர் போக்கிலேயே விட்டுவிடுங்கள்” என கூறினாராம். இவ்வாறு ஒரு தகவலை பயில்வான் ரங்கநாதன் தனது வீடியோ ஒன்றில் பகிர்ந்துகொண்டுள்ளார்.