காக்கா கழுகு கதையை மீண்டும் கிளறிவிட்டு சண்டையை மூட்டி விடும் “கூலி” பட நிறுவனம்? 

Author: Prasad
1 September 2025, 2:17 pm

காக்கா கழுகு கதை

“வாரிசு” படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவில் பேசிய சரத்குமார், விஜய்யை சூப்பர் ஸ்டார் என்று கூறியது ரஜினிகாந்த் ரசிகர்களை கடுப்பில் ஆழ்த்தியது. அதனை தொடர்ந்து சமூக வலைத்தளத்தில் விஜய் ரசிகர்களுக்கும் ரஜினி ரசிகர்களுக்கும் இடையே யார் சூப்பர் ஸ்டார் என்பது குறித்து வாக்குவாதம் ஏற்பட்டது. 

இதனை தொடர்ந்து “ஜெயிலர்” திரைப்படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவில் பேசிய ரஜினிகாந்த், “காக்கா கழுகை போய் கொத்தினாலும் கழுகு ஒன்றும் செய்யாது. கழுகு இன்னும் கொஞ்சம் மேலே பறக்கும். காக்காவால் அவ்வளவு உயரத்திற்கு பறக்க முடியாது” என ஒரு கதை கூறினார். இதில் ரஜினிகாந்த் காக்கா என்று கூறியது விஜய்யைதான் என்று பேச்சுக்கள் கிளம்பியது. 

Hamsini entertainment release coolie collection report with Rajinikanth kaakaa kazhugu story

கூலி படத்தின் சாதனை…

“கூலி” திரைப்படம் உலகளவில் தற்போது ரூ.455 கோடி வசூல் செய்துள்ளது. இந்த நிலையில் இத்திரைப்படத்தின் ஓவர்சீஸ் வெளியீட்டு உரிமையை கைப்பற்றிய ஹம்சினி என்டர்டெயின்மண்ட் நிறுவனம் “கூலி” படத்தின் ஓவர்சீஸ் வசூல் நிலவரத்தை குறித்து வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளது. 

அதில் ஓவர்சீஸில் “கூலி” திரைப்படம் 20 மில்லியன் டாலர்களுக்கும் மேல் வசூல் செய்து வருவதாக ஹம்சினி என்டர்டெயின்மண்ட் நிறுவனம் குறிப்பிட்டுள்ள நிலையில் “ஜெயிலர்” ஆடியோ வெளியீட்டு விழாவில் ரஜினிகாந்த் பேசிய காக்கா-கழுகு கதையை அந்த வீடியோவில் இணைத்து வெளியிட்டுள்ளது. இது விஜய்-ரஜினி ரசிகர்களுக்கிடையே மீண்டும் பிரளயத்தை கிளப்பியுள்ளது. 

  • G.V. Prakash understood Sainthavi at the time of separation.. Affection blossomed during the divorce case பிரியும் நேரத்தில் சைந்தவியை புரிந்து கொண்ட ஜி.வி பிரகாஷ்.. விவாகரத்து வழக்கில் மலர்ந்த பாசம்!