பிக்பாஸ் வீட்டிற்கு சென்ற பிரபல நடிகை குறித்து முன்னாள் கணவர் போட்ட பதிவு – ஷாக்கடைந்த ரசிகர்கள்..!

Author: Vignesh
11 October 2022, 4:30 pm

விஜய் டிவியின் மிகப்பெரிய ரியாலிட்டி ஷோவான பிக் பாஸூக்கு எப்போதும் ரசிகர்கள் மத்தியில் பெருத்த வரவேற்பு தான். இதன் காரணமாக அடுத்ததடுத்த சீசன்கள் தொடர்ந்து தற்போது பிக் பாஸ் நிகழ்ச்சியின் 6 ஆவது சீசன் ஆரம்பமாகியுள்ளது.

இந்த பிக்பாஸ் நிகழ்ச்சியின் 6 ஆவது சீசன் கமல்ஹாசனே தொகுத்து வழங்குகிறார். இதனுடைய Grand Opening சமீபத்தில் ஒளிபரப்பானது. 20 போட்டியாளர்கள் பங்கேற்று உள்ளனர்.

bigg_boss_updatenews360

இந்த பிக்பாஸ் நிகழ்ச்சியின் 6 ஆவது சீசனில் சீரியல் நடிகை ரச்சிதா பங்கேற்று உள்ளார். இவர் விஜய் தொலைக்காட்சியில் ஹிட் சீரியல்களான சரவணன் மீனாட்சி, பிரிவோம் சந்திப்போம், நாம் இருவர் நமக்கு இருவரில் நடித்துள்ளார்.

இது சொல்ல மறந்த கதை என்ற தொடரில் கலர்ஸ் டிவியில் நடித்து நல்ல பெயர் பெற்றார்.

rachitha-mahalakshmi_updatenews360

சீரியல் நடிகர் தினேஷை நடிகை ரச்சிதா காதலித்து திருமணம் செய்துகொண்ட நிலையில், தற்போது விவாகரத்து பெற்றுவிட்டார்களாம்.

இந்நிலையில், ரச்சிதா பிக்பாஸ் நிகழ்ச்சியில் தனது கணவர் குறித்து எதுவும் கூறவில்லை. இந்த நேரத்தில் தான் தினேஷ் தனது முன்னாள் மனைவிக்கு பிக்பாஸில் வெற்றிபெற வாழ்த்து கூறி பதிவு போட்டுள்ளார்.

  • Good News for Vijay And Trisha விஜய் – திரிஷா குறித்து விரைவில் குட் நியூஸ்.. பற்ற வைத்த பிரபலம்!
  • Views: - 524

    0

    0