‘அயலான் அயலானே’- நீ தமிழ் பெண்ணே கிடையாது.. சாய் பல்லவியை வம்பு இழுத்த நெட்டிசன்..!

Author: Vignesh
24 May 2024, 4:22 pm

நடன கலைஞராக டிவி நிகழ்ச்சியின் மூலம் அறிமுகமாகி மக்கள் மனதில் இடம் பிடித்தவர் நடிகை சாய் பல்லவி. பின்னர், அல்போன்ஸ் புத்திரன் இயக்கத்தில் வெளியான ப்ரேமம் படத்தின் மூலம் மலர் டீச்சராக இந்திய திரையுலக ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தார். இதனைத் தொடர்ந்து, நிறைய பட வாய்ப்புகள் குவியத் தொடங்கியது. தமிழில் NGK, மாரி 2 உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்துள்ள இவர், மலையாளம் மற்றும் தெலுங்கு மொழி திரைப்படங்களிலும் நடித்துள்ளார்.

sai-pallavi

மேலும் படிக்க: இதை எப்படி சொல்றதுன்னு தெரியல… Cooku with Comali-யை விட்டு விலகிய வெங்கடேஷ் பட் வெளியிட்ட Video..!(Video)

ஹீரோயினுக்கு ஏத்த எந்த வரையறையும் இல்லாமல் வித்தவுட் மேக்கப்பில் நேச்சுரலாக வலம் வருவது தான் இவரின் தனி அழகு. இவர் சமீப காலமாக, கதாநாயகிகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் கதைகளை தேர்வு செய்து தனது நடிப்பு திறமையை காட்டி வருகிறார் நடிகை சாய் பல்லவி. அழகான தோற்றம் கொண்டு ரசிகர்களை கவர்ந்த இவர், கிளாமரான காட்சிகளில் நடிக்க தடை போட்டு இருக்கிறார். படுக்கை அறை காட்சிகள், முத்த காட்சிகள் இருந்தால் அந்த காட்சிகளில் நடிக்க மாட்டேன் என்று மறுத்துவிடுகிறார்.

saipallavi

மேலும் படிக்க: வயித்து பொழப்புக்காக நாங்க காட்டுகிறோம்.. பிரபல நடிகரை வெளுத்து வாங்கிய சகிலா..! (Video)

இந்நிலையில், சமீபத்திய பேட்டி ஒன்றில் சாய்பல்லவியிடம் கன்னட பெண் என செய்திகள் வெளியாவது குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதில் அளித்தவர் கடும் கோபத்தோடு நான் கன்னட பெண் இல்லை. தமிழ் பெண் தான் என கூறி விளக்கம் கொடுத்திருந்தார். அதில், என்னுடைய சொந்த ஊர் படுகா ஊட்டி பக்கத்துல கோத்தகிரி பக்கத்துல தான இருக்கு, ஊட்டியும் தமிழ்நாட்டில் தானே இருக்கு அப்ப நான் தமிழ் பெண்தான் என அவர் கூறியுள்ளார். ஆனால், நெட்டிசன் ஒருவர் எங்கு பிறப்பினும் தமிழன் தமிழனே இங்கு பிறப்பினும் அயலான் அயலானே எனக் கூறியுள்ளார். மேலும், படுகர் மொழியோ கன்னட மொழியில் உள்ள கிளை மொழி தான் எனவே சாய் பல்லவி ஒரு கன்னடர் என அழுத்தமாக பதிவிட்டுள்ளார்.

  • Monalisa Bose viral at Kumbh Mela மகா கும்பமேளாவில் வைரலான இளம் பெண்…அழகில் மயங்கிய பிரபல இயக்குனர்…தட்டி தூக்கிய பாலிவுட்..!