ஆமா திமிரு தான்… எனக்கு வயசே ஆகாது – விருதுவிழாவில் பெருமை பொங்கிய சித்தார்த்!

Author: Rajesh
20 December 2023, 6:54 pm

பிரம்மாண்ட இயக்குனர் ஷங்கரின் பாய்ஸ் திரைப்படத்தில் நடித்ததன் மூலம் திரையுலகில் அறிமுகமானவர் நடிகர் சித்தார்த். அதனைத் தொடர்ந்து, ஆயுத எழுத்து, 180, காதலில் சொதப்புவது எப்படி, ஜிகர்தண்டா, காவிய தலைவன், அரண்மனை 2, எனக்குள் ஒருவன், அவள், அருவம் போன்ற தமிழ் திரைப்படங்களில் நடித்துள்ளார்.

தமிழ் மொழி மட்டுமல்லாது தெலுங்கு, ஹிந்தி, மலையாளம் போன்ற மொழி திரைப்படங்களிலும் நடித்துள்ளார். நடிகராக மட்டுமல்லாது சில பாடல்களையும் பாடியுள்ளார்.தனது சமூக வலைதளப் பக்கத்தில் அவ்வப்போது எதாவது கருத்து பதிவிடுவதையும் வழக்கமாக கொண்டுள்ளார்.

siddharth-updatenews360

அவர் தேர்ந்தெடுக்கும் கதைக்களம் சிறப்பாக இருந்தாலும் ஏனோ அந்தப் படங்கள் ரசிகர்களிடம் பெரிய அளவில் வரவேற்பு பெறாமல் இருந்தது. கடைசியாக இவர் சித்தா என்ற படத்தில் நடித்திருந்தார். இப்படம் பெரும் சர்ச்சைகளை சந்தித்தாலும் தியேட்டரில் நன்றாக ஓடி நல்ல விமர்சனத்தை பெற்றது.

இந்நிலையில் தற்போது சொல்லவரும் தகவல் என்னெவென்றால், விருது விழா ஒன்றில் பேசிய சித்தார்த் ” வயதே ஆகாமல் 44 வயதிலும் இன்னும் அதே இளமையோடு இருக்கிறீர்களே அதன் ரகசியம் என்ன? என கேட்டதற்கு, ” நான் சொன்னால் நீங்க திமிருன்னு சொல்லுவீங்க… அடுத்த 20 வருஷத்துக்கு எனக்கு வயசே ஆகாதுங்க. என் ரசிகர்கள் வயசு ஆகாமல் பார்த்துக்கொள்வார்கள் பாய்ஸ் திரைப்படம் ரிலீஸ் ஆகி 20 வருடங்கள் ஆகிவிட்டது. இங்கே கைதட்டும் பலபேர் பாய்ஸ் படத்திற்கு பிறகு தான் பிறந்திருப்பீங்க ஆனாலும், உங்கள் அன்பு என்னை சிலிர்க்க வைக்கிறது என்றார்.

  • famous journalist criticize mani ratnam for muththa mazhai song ஆடியன்ஸ் மேல ஏன் பழி போடுறீங்க? பாட்டு வைக்காதது யார் தப்பு?- மணிரத்னத்தை கண்டபடி கேட்ட பிரபலம்…